சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு டிச.17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும் என்று பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று பாமக தலைவர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிச.17-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

