திருவாரூர்: ‘ராமரை இழிவாகப் பேசிய கவிஞர் வைரமுத்துவை நடமாட விடக்கூடாது’ என மன்னார்குடியில் ராஜமன்னார் செண்டலங்கார ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபகாலமாக இந்துக்களுக்கு விரோதமான போக்கு அதிகரித்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க, இந்த அரசு கெடுபிடிகளை விதிக்கிறது.
சென்னையில் நடந்த விழா ஒன்றில், கவிஞர் வைரமுத்து, ராமபிரானை மனநிலை சரியில்லாதவர் என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும் பேசியுள்ளார்.
இந்துக்களுக்கு விரோதமாக இவர் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வைரமுத்துவை, சாலையில்நடமாட விடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.