விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் சந்தித்தார். இந்நிலையில், தைலாபுரத்துக்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று சென்று, பாமக நிறுவனர் ராமதாஸிடம், தனது குடும்பத்தில் நடைபெறும் திருமணத்துக்கான அழைப்பைக் கொடுத்தார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பாமக தரப்பில் கேட்டபோது, “தமிழகத்தின் அரசியல் கள நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும் என்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் விருப்பத்தை சி.வி.சண்முகம் முன்வைத்திருக்கிறார்” என்றனர்.