மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 16,288 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 15,040 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடியிலிருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 119.02 அடியாகவும், நீர் இருப்பு 91.91 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக பதிவான நீ்ரவரத்து மாலையில் 16 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. மேலும், நேற்று காலை 14 ஆயிரம் கனஅடியாகவும், பகல் ஒரு மணியளவில் 12 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து குறைந்தது.