Last Updated : 15 Aug, 2025 05:18 AM
Published : 15 Aug 2025 05:18 AM
Last Updated : 15 Aug 2025 05:18 AM

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 15,040 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 9,263 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணை நீர்மட்டம் நேற்று 118.99 அடியாகவும், நீர் இருப்பு 91.86 டிஎம்சியாகவும் இருந்தது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 6,500 கனஅடியாக குறைந்தது.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow
FOLLOW US