சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (செப். 9 ஆம் தேதி) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 09 (செவ்வாய் கிழமை) நண்பகல் 12.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கூட்டம், திமுக முப்பெரும் விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை ஆகிய பொருள்களில் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.