உடுமலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் எந்த ஒரு மருத்துவ அமைப்பும் கள் அங்கீகரிக்கப்பட்ட உணவு என்று அறிவிக்கவில்லை. ஆனால், கள் உணவுப்பொருள் என்று தொடர்ச்சியாக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சட்டத்தை மீறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மரத்தில் ஏறி கள் இறக்கி, மக்களுக்கு பருக கொடுத்தார்.
பொள்ளாச்சியில் கள் இறக்கிய விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், சீமான் மீது மட்டும் ஏன் வழக்கு பதியவில்லை?. கள் பிரச்சாரம் குறித்து தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அப்போது புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி உடனிருந்தார்.