சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து, மணல் கடத்தல் காரர்கள் தாக்கியதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நேர்மையாக பணியாற்றிய அதிகாரியை தாக்கியதுடன், இதற்கு மேலும் கடத்தலைத் தடுக்க முயற்சித்தால் வண்டியை ஏற்றிக் கொலைசெய்துவிடுவதாக மணல் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், ‘திமுக ஆட்சி அமைந்ததும் மணல் அள்ளலாம்’ என அச்சாரமிட்டதை ஒப்பிட்டுப் பார்த்தால் தொடர்ந்து மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு திராவிட மாடல் அரசே ஒத்துழைப்பு தருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.