Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பெண் ஊழியர்களின் தகுதிகாண் பருவ கணக்கில் மகப்பேறு விடுப்பு சேர்த்து அரசாணை வெளியீடு
    மாநிலம்

    பெண் ஊழியர்களின் தகுதிகாண் பருவ கணக்கில் மகப்பேறு விடுப்பு சேர்த்து அரசாணை வெளியீடு

    adminBy adminMay 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெண் ஊழியர்களின் தகுதிகாண் பருவ கணக்கில் மகப்பேறு விடுப்பு சேர்த்து அரசாணை வெளியீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசு பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவகாலத்தில் பயன்படுத்தும் மகப்பேறு விடுப்பை, தகுதிகாண் பருவகால கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையின் விவரம்: தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த விடுப்பு கடந்த 2021 ஜூலை 1 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதுள்ள விதிகள்படி மகப்பேறு விடுப்புக்காலம் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

    இதனால், அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்துக்குள் முடிக்க முடியாமல் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்துக்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசு பணியில் உள்ள மகளிரின் பணி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் மகப்பேறு விடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்” என அறிவித்திருந்தார்.

    முதல்வரின் அறிவிப்புக்கிணங்க ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தின்போது எடுத்துக் கொள்ளும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சிறப்பு அல்லது தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்ட தகுதிகாண் பருவ பணிக்காலம் கடந்த ஏப்.28-ம் தேதி முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஏப்.28-ம் தேதிக்கு முன் தகுதிகாண் பருவ பணிக்காலம் முடிந்திருந்தால் இந்த சலுகை பொருந்தாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம் 

    July 6, 2025
    மாநிலம்

    அஜித்குமாரை சித்ரவரை செய்த போலீஸாரிடம் இருந்து ரூ.1 கோடி வசூலித்து இழப்பீடு வழங்க விசிக வலியுறுத்தல்

    July 6, 2025
    மாநிலம்

    தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகல்!

    July 6, 2025
    மாநிலம்

    அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 6, 2025
    மாநிலம்

    வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

    July 6, 2025
    மாநிலம்

    “திமுக ஆட்​சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் விமர்சனம்

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விரைவில் ‘லக்கி பாஸ்கர் 2’: இயக்குநர் வெங்கி அட்லுரி தகவல்
    • சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம் 
    • வெண்ணெய் சாப்பிடுவதால் 3 நன்மைகள் என்று சிறந்த இரைப்பை குடல் நிபுணர் தெரிவித்துள்ளார்
    • ஓய்வு கிட்டத்தட்ட சோகத்திற்கு மாறுகிறது: உட்டா நீர்வீழ்ச்சியில் நீச்சல் வீரர்கள் வீழ்ச்சியடைந்த கற்பாறைகளில் இருந்து தப்பிக்கிறார்கள் – வீடியோ – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஐஎஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.