இப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தனது கடந்த அக்.27-ம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிஎல்ஏ-க்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளித்து உள்ளது.
தண்டனைக்குரியது: அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும்போது பிஎல்ஏக்கள் “என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பாகத்துக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன். தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1950, பிரிவு 31-ன் படி தண்டனைக்கு உரியது என்பதையும் நான் அறிவேன்” என்ற உறுதிமொழியையும் இணைத்து அலுவலர்கள் அளிக்க வேண்டும்.

