புதுச்சேரி: புதுச்சேரியில் தேரை வடம் பிடித்து இழுக்க முதல்வர் ரங்கசாமிக்காக, துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் காத்திருந்ததார்.
வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் தேரை வடம் பிடித்து தொடங்கி வைப்பதற்காக துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் சரியாக காலை 7.30 மணிக்கு வந்தார்.
அதேபோல் தேரை வடம் பிடித்து இழுக்க முதல்வர் ரங்கசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் சரியான நேரத்துக்கு வரவில்லை. அதே நேரத்தில் பேரவைத் தலைவர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர், எம்எல்ஏக்கள் ஆகியோரும் வந்திருந்தனர். இதனால் ஆளுநர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர் முன்பு வடம் பிடித்து இழுக்காமல் முதல்வர் ரங்கசாமி வருகைக்காக காத்திருந்தனர். சுமார் 10 நிமிடம் தாமதமாக முதல் அமைச்சர் அவசர அவசரமாக வந்தார். அதன் பிறகு அனைவரும் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.