சென்னை: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் உட்பட 4 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சென்னையில் 72 மணிநேர உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்குகிறது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்பப் பெறுவது, பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது.
சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டம் 26-ம் தேதி காலை 10 மணி வரை நடைபெற உள்ளது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் த.அமிர்தகுமார் தொடங்கி வைக்கிறார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ், எம்.செல்வகுமார் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றுகின்றனர்.