சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தனது 4-ம் கட்ட பிரச்சாரத்தை செப்.1-ம் தேதி மதுரையில் தொடங்குகிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் பிரச்சார சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, தற்போது 4-ம் கட்ட பிரச்சாரத்தை செப்.1-ம் தேதி மதுரையில் தொடங்க உள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 4-ம் கட்ட பிரச்சாரத்தை செப்.1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மேற்கொள்கிறார். 4-ம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிகள், 2-ம் தேதி மதுரை மேற்கு, வடக்கு தொகுதிகள், 3-ம் தேதி மதுரை மாநகர், மதுரை மத்தியம், தெற்கு ஆகிய தொகுதிகள், 4-ம் தேதி சோழவந்தான், உசிலம்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகள், 5-ம் தேதி தேனி மாவட்டம் கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம் தொகுதிகளில் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
செப்.6-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதிகளிலும், 7-ம் தேதி ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழநி தொகுதிகள், 9-ம் தேதி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, 10-ம் தேதி பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, 11-ம் தேதி மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம், 12-ம் தேதி திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.