Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
    மாநிலம்

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

    adminBy adminJuly 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ‘விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், பனையடிபட்டி தெருவைச் சேர்ந்த பாலகுருசாமி (வயது 50) த/பெ.மூக்கையா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவகாசி வட்டம், தாயில்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 50) மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் சாத்தூர் வட்டம், படந்தால், நடுத்தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி (வயது 37), சிவகாசி வட்டம், தாயில்பட்டி, பசும்பொன் நகரைச் சேர்ந்த திரு.ராஜசேகர் (வயது 29), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் ராம் (வயது 28) மற்றும் ரமேஷ் (வயது 20) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.’ இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்க கூடாது; நமது இலக்கு 2026 அல்ல, 2029 தேர்தல்: நயினார் நாகேந்திரன் 

    July 7, 2025
    மாநிலம்

    காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் கெட்டுவிட்டது: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு

    July 6, 2025
    மாநிலம்

    கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்

    July 6, 2025
    மாநிலம்

    ”ரத்தத்தின் ரத்தமே வா! மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!” – தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்

    July 6, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் – வீடுதோறும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி சென்னையில் நாளை தொடக்கம்

    July 6, 2025
    மாநிலம்

    கீழதாயில்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து – உரிய இழப்பீடு வழங்க தேமுதிக வலியுறுத்தல்

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெலுங்கில் ‘ஜெய ஜெய ஜெயஹே’ ரீமேக்!
    • ‘வார் 2’ படத்தின் தெலுங்கு உரிமை விலை ரூ.90 கோடி?!
    • அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்க கூடாது; நமது இலக்கு 2026 அல்ல, 2029 தேர்தல்: நயினார் நாகேந்திரன் 
    • இங்கிலாந்தை 336 ரன்களில் வீழ்த்தி இந்தியா அபாரம்: ஆகாஷ் தீப் அசத்தல் | ENG vs IND
    • ரன்வீர் சிங் ஜோடியாக சாரா அர்ஜுன்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.