Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, February 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் இன்று விவசாயிகள் சங்கம் போராட்டம்
    மாநிலம்

    நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் இன்று விவசாயிகள் சங்கம் போராட்டம்

    adminBy adminJune 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் இன்று விவசாயிகள் சங்கம் போராட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நிலத்தடி நீருக்கான வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில், மத்திய அரசின் அறிவிப்பு நகலைஎரிக்கும் போராட்டம் இன்று நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நிலத்தடி நீரை முறைப்படுத்தும் வகையில், விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து, விவசாயிகளுக்கு வரி விதிக்கும் விதமாக ரூ.1,600 கோடியில் நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்தும் திட்டம் அமலாக்கப்பட உள்ளதாக மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஹெச்.எம்.பாட்டீல் அறிவித்துள்ளார்.

    இது விவசாயிகளுக்கு எதிரான தாக்குதலாகும். தமிழகத்தின் நீர் தேவை அண்டை மாநிலங்களையே நம்பி உள்ளது. தமிழகத்துக்கான நீர் பங்கீடு பாதகமாக உள்ள நிலையில், வேளாண்மை உற்பத்திக்கு அடிப்படையாக இருந்து வருவது நிலத்தடி நீர்தான். தேவைக்கு மேல் விவசாயிகள் எவரும் நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தாலும், அதனால் மோட்டார் உள்ளிட்ட மின் சாதன கருவிகள் பழுதாகி வீண் செலவு ஏற்படும் என்பது விவசாயிகளுக்கு தெரியும்.

    திரும்ப பெறவேண்டும் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்ற அக்கறை விவசாயிகளுக்கும் இருக்கிறது. இதை மத்திய அரசு உணர வேண்டும். நீர் நிலைகளை தூர்வார, மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டங்களை வகுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்யாமல், விவசாயிகளை குறிவைத்து தாக்கும் வகையில் திட்டங்களை அறிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    நீண்ட போராட்டங்கள், எண்ணற்ற விவசாயிகளின் இறப்புக்கு பின்னர் தான் தமிழகத்தில் கட்டணமில்லா வேளாண் மின்சாரம் அமல்படுத்தப்படுகிறது. அதை துண்டித்திடவே மத்திய அரசின் முன்னேற்பாடு இது. எனவே, மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசின் உத்தரவு நகலை எரிக்கும் போராட்டம் நாளை (இன்று) நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    அன்புமணி வலியுறுத்தல்: இதுதொடர்​பாக பாமக தலைவர் அன்புமணி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா முழு​வதும் வேளாண்​மைக்​காகப் பயன்​படுத்​தப்​படும் நிலத்​தடி நீருக்கு வரி விதிக்​கும் முறை மாநில அரசுகளு​டன் இணைந்து செயல்​படுத்​தப்பட இருப்​ப​தாக மத்​திய அரசின் நீர்​வளத்​துறை தெரி​வித்​திருக்​கிறது. நிலத்​தடி நீரை பயன்​படுத்​தும் விவ​சா​யிகள் அனுப​வித்து வரும் துயரங்​களை​யும், நெருக்​கடிகளை​யும் புரிந்து கொள்​ளாமல், இப்​படி ஒரு திட்​டத்தை செயல்​படுத்த நீர்வள அமைச்​சகம் திட்​ட​மிடு​வது கண்​டிக்​கத்​தக்​கது.

    நிலத்​தடி நீர் வீணாவதைத் தடுக்க அரசு நினைத்​தால், அதுகுறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​து​வதும், நிலத்​தடி நீரை சிக்​க​ன​மாகப் பயன்​படுத்​தும் விவ​சா​யிகளுக்கு வெகும​தி​களைக் கொடுத்து ஊக்​கு​விப்​பதும்​தான் சரி​யான நடவடிக்​கை​யாக இருக்​கும். வரி விதிப்​பது சரி​யான​தாக இருக்​காது.

    ஏற்​கெனவே பல வகை​களில் விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இத்​தகைய நிலை​யில் வேளாண் பயன்​பாட்​டுக்​கான நிலத்​தடி நீருக்கு வரி விதித்து விவ​சா​யிகளை மேலும் நெருக்​கடிக்கு ஆளாக்​கக்கூ​டாது. அத்​தகைய ஆபத்​தான திட்​டத்தை மத்​திய அரசு கைவிட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • Zoho CEO ஸ்ரீதர் வேம்புவின் ₹15,000 கோடி விவாகரத்து வழக்கு: அவரது பிரிந்த மனைவி பிரமிளா சீனிவாசன் யார்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அமெரிக்கன் போதாது’: மகளின் ‘இந்து’ பெயர் சாவித்திரிக்கு பின்னடைவை எதிர்கொண்ட விவேக் ராமசாமி | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விவேக் ராமஸ்வாமி மற்றும் டாக்டர் அபூர்வா திவாரி ஆகியோர் தங்களின் மூன்றாவது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்: பெயரின் அர்த்தம் இதோ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘முன்னாள் H-1B’: நடந்துகொண்டிருக்கும் விசா வரிசையில் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி Uber CFO ஆனதை இந்திய-அமெரிக்க சமூகம் கொண்டாடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூட்டானின் நிலையான வளர்ச்சிக் கட்டணம்: இந்தியர்கள் என்ன செலுத்துகிறார்கள், யார் USD 100 செலுத்துகிறார்கள், எப்போது வரை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.