புதுக்கோட்டை: “என்கவுன்ட்டர் தேவை என்றால், அதை தவிர்க்க முடியாது” என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. தமிழகத்தில் நலமாக, வளமாக, பாதுகாப்பாக இருக்கிறோம் என்று மக்கள் சர்டிபிகேட் கொடுக்கிறார்கள். அது போதும்.
கொலை, கொள்ளை குறித்து எந்த இடத்தில் தவறு நடந்தாலும் அதை உடனே கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. என்கவுன்ட்டர் தேவை என்றால், அதை தவிர்க்க முடியாது. போலீஸார் விசாரணக்கு தனியாக செல்லும்போது சில நேரங்களில் பிரச்சினை நடந்துவிடுகிறது. ஆனால், வடமாநிலங்களில் இதைவிட மோசமாக நடக்கிறது” என்றார்.
இதனிடையே, உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன், போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி கிரிஸ் யாதவ் அளித்த விளக்கம் > சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் பிடிபட்ட நபர் என்கவுன்ட்டர் ஏன்?- மாவட்ட எஸ்.பி விளக்கம்