சென்னை: காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: தேர்தல் ஆணையம் பாஜகவுடன் ரகசிய உடன்பாடு கொண்டு வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடத்தியிருப்பதை ராகுல்காந்தி பகிரங்கமாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார். நாட்டின் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் போலியான நபர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை கண்டித்து வரும் செப்.7-ம் தேதி திருநெல்வேலியில் எனது தலைமையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. இதில், அகில இந்திய மற்றும் தமிழக காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.