தேனி: தேனியில் நடைபெற்று வரும் அனைத்து துறைகள் சார்பிலான ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்து வருகிறார்.
தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை அனைத்து துறை சார்பிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அமைச்சர் ஐ. பெரியசாமி, ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், அரசு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் ஷஜீவனா, எம்பி தங்க தமிழ்ச்செல்வன், கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்எல்ஏக்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பின்பு ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் ஒன்பது புதிய வழித்தடத்தில் புதிய மினி பேருந்துகளை இயக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவல வளாகத்தில் உள்ள தேனி மக்களவைத் தொகுதி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்பு மாலையில் தேனி அருகே மதுராபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான கூட்டத்தில் கலந்துரையாட உள்ளார்.