சென்னை: விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளை முன்னிட்டு. சென்னை, ஈரோடு ஓடாநிலை, சேலம் சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள அவரின் திருவுருவ சிலை மற்றும் படத்துக்கு அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220ஆவது நினைவு நாளான இன்று காலை 10 மணியளவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி,
சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பென்ஜமின், சின்னையா, அப்துல் ரஹீம்,
அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம், அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம. ராசு, கழக அமைப்புச் செயலாளர் ராயபுரம் மனோ, கழக அமைப்புச் செயலாளர் திருவேற்காடு பா. சீனிவாசன், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் விருகை ரவி, வட சென்னை வடக்கு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் புரசை பாபு, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விஜயகுமார், கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ஜெயவர்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலை அவர்களுடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிந்த அவரது திருஉருவப் படத்திற்கும், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி.இராமலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை அவர்களுடைய திருவுருவப்படத்திற்கும்; சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களுடைய நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செம்மலை, சரோஜா, சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இளங்கோவன் மற்றும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.