மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருப்பதால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக ஆர்.விஜயகுமார் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “2 நீதிபதிகளும் தள்ளு படி செய்த மனுக்களும், ஒரே மாதிரியான உத்தரவு பிறப்பித்த மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்படாது. 2 நீதிபதிகளும் முரண்பட்டு தீர்ப்பளித்த (சோலைக்கண்ணன், ராமலிங்கம், பரமசிவம், ஒசீர்கான் மனுக்கள்) மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும்’’ என்று கூறி வழக்கு விசாரணையை ஜூலை 28-க்கு தள்ளிவைத்தார்