திருச்சி: 2 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஸ், கீதா ஜீவன் ஆகியோர் பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மதியம் 2.30 மணியளவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையில் உள்ள இறங்குதளத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்த பிறகு கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார். இரவு 7 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி கிளம்பிச் செல்கிறார்.