கரூர்: தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்ததைக் கண்டித்தும், அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மாவட்டம் முழுவதம் இன்று (செப்.28) கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 39 உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழப்பை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் கரூர் மாவட்டம் மாவட்டத்தில் கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன.