Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“தமிழ்நாட்டில் பாஜக ஒருக்​காலும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து!” – அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அதிரடி
    மாநிலம்

    “தமிழ்நாட்டில் பாஜக ஒருக்​காலும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து!” – அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அதிரடி

    adminBy adminJuly 6, 2025No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “தமிழ்நாட்டில் பாஜக ஒருக்​காலும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து!” – அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அதிரடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வலுவான கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டே இருந்தாலும் பாஜக – அதிமுக கூட்டணியை பொருந்தாத கூட்டணியாகவே பலரும் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து அதிமுக-வுக்குள்ளும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. கூடவே, பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ கோஷமும் அதிமுக-வினரை சீண்டிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

    பாஜக-வுடன் எந்தக் காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் அதனுடன் இணைந்துள்ளீர்களே..?

    கூட்​டணி என்​பது தேர்​தல் காலத்​தில் செய்​யப்​படு​கின்ற ஒரு தற்​காலிக ஏற்​பாடு. பெரும்​பாலும் வெற்​றியை அடிப்​படை​யாகக் கொண்​டு​தான் கூட்​ட​ணி​கள் உரு​வாகும். கொள்​கை​யின் அடிப்​படை​யில் இல்​லை. இந்​தி​யா​வில் பெரும்​பாலான கட்​சிகள் பாஜக-வுடன் கூட்​டணி வைத்​திருக்​கின்​றன. அது​போல பாஜக உடன் நாங்​கள் கூட்​டணி அமைத்​ததும் இயல்​பான ஒன்​று​தான்.

    இது அதிமுக-வுக்கு சாதகமான கூட்டணி என நம்புகிறீர்களா?

    ஆம். கடந்த மக்​கள​வைத் தேர்​தல் முடி​வின் கணக்​கு​களை வைத்து ஆய்வு செய்​த​போது 2026 சட்​டமன்​றத் தேர்​தலில் பாஜக உடனான கூட்​டணி பலன் தரும் என்று நம்​பு​கிறேன்.

    பாஜக கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுக-வுக்கு கிடைக்குமா?

    பெரும்​பாலும் கிடைக்​காது. ஆனால், சிறு​பான்மை சமு​தா​யத்​தைச் சேர்ந்த அதி​முக கட்சி ஓட்​டு​கள் கண்​டிப்​பாக எங்​களுக்​குக் கிடைக்​கும்.

    இபிஎஸ் தனது சுயநலத்திற்காக அதிமுக-வை பாஜக-விடம் அடமானம் வைத்துவிட்டதாக வரும் விமர்சனங்களை கவனிக்கிறீர்களா?

    இந்த விமர்​சனத்​தில் உண்மை இல்​லை. அதி​முக-வை யாரும் யாரிடத்​தி​லும் அடமானம் வைக்க முடி​யாது. இன்​று​வரை அதி​முக-​வின் காப்​பாள​ராகவே இபிஎஸ் விளங்கி வரு​கி​றார்.

    என்டிஏ கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொன்னபோது அமைதியாக இருந்துவிட்டு இப்போது, “தனித்தே ஆட்சி அமைப்போம்” என இபிஎஸ் சொல்வது சரியா?

    கூட்​டணி ஆட்​சியை தமிழ்​நாட்டு மக்​கள் என்​றைக்​கும் விரும்​பியது இல்​லை. பெரும்​பான்மை இடங்​களை அதி​முக பிடிக்​கப்​போகிறது. எனவே, கூட்​டணி ஆட்சி என்ற பேச்​சுக்கே இடமில்​லை.

    முதலமைச்சராக அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் வருவார் என அமித் ஷா சொல்லி இருப்பதை பார்த்தால் பாஜக-வுக்கு வேறு திட்டம் இருக்கும் போல் தெரிகிறதே?

    முதலமைச்​சர் தேர்​வைப் பொறுத்​தவரை பாஜக-​வின் திட்​டம் ஒன்​றும் பலிக்​காது. இபிஎஸ்ஸை முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தித்​தான் தேர்​தலில் போட்​டி​யிடு​கி​றோம். எனவே, இபிஎஸ் தான் முதலமைச்​ச​ராக வரு​வார்.

    ஒருவேளை, கூட்டணி ஆட்சிக்கு இபிஎஸ் முரண்டு பிடித்தால் செங்கோட்டையன், வேலுமணி போன்றவர்களை வைத்து பாஜக புதிய திட்டம் போடலாம் என்கிறார்களே?

    இது கற்​பனை​யான கேள்​வி. இது​போன்ற திட்​டங்​கள் பாஜக-​விடம் இருந்​தால், அவற்றை அதி​முக தவிடு​பொடி​யாக்​கும்.

    இந்தத் தேர்தலிலும் அதிமுக சரிவு கண்டால் கட்சியின் எதிர்காலமும், இபிஎஸ்ஸின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும் என்கிறார்களே?

    இந்​தத் தேர்​தலில் அதி​முக-வுக்கு எந்​தச் சரி​வும் ஏற்​ப​டாது. எனவே, இபிஎஸ் தலை​மை​யில் அதி​முக-​வின் எதிர்​காலம் பிர​காச​மாகவே இருக்​கும்.

    கோவையில் இருந்து இபிஎஸ் தொடங்கும் எழுச்சிப் பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்?

    எழுச்​சிப் பயணம் மக்​களை கவர்ந்து இழுக்​கும். தனது பயணத்​தில், அதி​முக செயல்​படுத்​திய மக்​கள் நலத் திட்​டங்​களை இபிஎஸ் எடுத்​துரைப்​பார். எனவே, இந்​தப் பயணம் அதி​முக-வை ஆட்​சி​யில் அமர்த்​தும் புரட்​சிப் பயண​மாக உரு​வெடுப்​பது உறு​தி.

    இத்தனை ரிஸ்க் எடுத்து பாஜக-வுடன் கூட்டணி சேர்வதற்கு பதிலாக விஜய்யுடன் கூட்டணி வைத்திருக்கலாமே?

    கூட்​டணி என்​பது இரண்டு கட்​சிகளுக்​கும் அதன் தலை​வர்​களுக்​கும் இடையே நடக்​கின்ற ஓர் உடன்​பாடு. எனவே, எங்களுடன் கூட்​டணி ஏற்​படு​வதற்கு விஜய்​யின் ஒத்​துழைப்​பும் அவசி​யம்.

    முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட வீடியோவை எப்படி சகித்துக் கொண்டது அதிமுக?

    சகித்​துக்​கொள்​ள​வில்​லை. அதி​முக அதற்கு எதிர்​வினை​யாற்​றியது. நட்பு ரீதி​யில் அங்கு சென்​றிருந்த முன்​னாள் அமைச்​சர்​களே தங்​களு​டைய கடுமை​யான ஆட்​சேபனை​களை தெரி​வித்​திருந்​தனர். ‘எங்​கள் உயிர் உள்​ளவரை அண்​ணாவை எந்​தக் காலத்​திலும் விட்​டுத்​தர​மாட்​டோம்’ என இபிஎஸ் ஓர் அறிக்​கை​யில் தெரி​வித்​திருந்​தார்.

    ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் தளவாய் சுந்தரத்தை பொறுப்பில் இருந்து நீக்கிய இபிஎஸ், மோகன் பாகவத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலுமணியை கண்டு கொள்ளவில்லையே?

    அப்​பொழுது எங்​களுக்கு பாஜக-வுடன் இணக்​கமில்​லை. எனவே, தளவாய் சுந்​தரத்​தின் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. இப்​பொழுது இணக்​க​மான​தால், வேலுமணி மீது நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. எனவே​தான், வெகு​விரை​வில் தளவாய் சுந்​தரம் கட்​சி​யில் மீண்​டும் சேர்த்​துக்​கொள்​ளப்​பட்​டர்.

    இனியும் தனித்து ஆட்சி என்ற கோஷம் தமிழகத்தில் எடுபடும் என நினைக்கிறீர்களா?

    தனித்து ஆட்சி என்ற கோஷம் தான் தமி​ழ​கத்​தில் எடு​படும். எந்​தக் காலத்​தி​லும் தமிழக மக்​கள் கூட்​டணி ஆட்​சியை விரும்​ப​மாட்​டார்​கள்.

    தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக உறுதியளித்துவிட்டு பிறகு மறுத்தது அரசியல் நாகரிகமா?

    தேமு​தி​க-வுக்கு ராஜ்ய சபா சீட் தரு​வ​தாக எந்​த​வித ஒப்​பந்​த​மும் அதி​முக-வுடன் ஏற்​பட​வில்​லை. ஆனால், இப்​பொழுது 2026-க்​குப் பிறகு ஒரு இடம் தரு​வ​தாக உறு​தி​யளிக்​கப்​பட்​டுள்​ளது. அதி​முக எப்​பொழுதுமே சொன்ன சொல்லை மீறு​வ​தில்​லை. அன்​புமணி ராம​தாஸ், ஜி.கே.​வாசன் ஆகி​யோர் அந்த அடிப்​படை​யில்​தான் எம்பி ஆக்​கப்​பட்​டனர்.

    பாஜக-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் காணாமல் போய்விடும் என்று சொல்லப்படும் கருத்தை ஏற்கிறீர்களா?

    இதை நான் ஏற்​க​வில்​லை. நெருப்​பின் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போன்ற அதி​முக-வுக்கு அது பொருந்​தாது. எத்​தனை முறை வீழ்ந்​தா​லும், அதை​விட வேக​மாக​வும் கம்​பீர​மாக​வும் எழுந்த நிற்​கும் கட்சி அதி​முக. எனவே, அதி​முக-வை எவராலும் வீழ்த்​தவோ, அபகரிக்​கவோ முடி​யாது.

    திராவிட மண்ணில் பாஜக காலூன்ற துடிப்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

    தமிழ்​நாட்​டில் காலூன்ற துடிப்​பது பாஜக-​வின் எண்​ணம். அது ஒருக்காலும் நடக்​காது என்​பது என்​னுடைய தனிப்​பட்ட கருத்​து.

    சுமார் எட்டாண்டு காலமாக திமுக தனது கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறதே?

    இன்​னும் தேர்​தலுக்கு 10 மாதங்​கள் உள்​ளன. தேர்​தல் கூட்​டணி என்​பது ஒரே இரவில்​கூட திடீர் என மாறக்​கூடியது. எனவே, திமுக கூட்​ட​ணி​யில் இப்​போது சலசலப்பு துவங்​கி​விட்​டது. அது நிலைத்து நீடிக்​குமா என்​பதை தேர்​தல் நெருக்​கத்​தில் தான் உணர முடி​யும்.

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கூட்டணி ஆட்சி தான் என பாஜக நிர்பந்தித்தால் என்ன செய்வீர்கள்?

    தனிப்​பெரும்​பான்​மை​யுடன் அதி​முக ஆட்சி அமைக்​கும். இபிஎஸ்​தான் முதல்​வ​ராக வரு​வார். எந்த நிர்​பந்​தத்​திற்​கும் அதி​முக பணி​யாது.

    உண்மையைச் சொல்லுங்கள்… திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் தழைத்திருக்கிறதா இல்லையா?

    தமி​ழ​கம் தழைக்​க​வில்​லை. மாறாக மிக​வும் பின்​தங்​கி​யிருக்​கிறது. சுமார் 8 லட்​சம் கோடி ரூபாய் கடனில் தமி​ழ​கம் பொருளா​தார ரீதி​யில் தள்​ளாடு​கிறது.

    தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு தர மறுப்பது சரியான அணுகுமுறையா?

    இல்​லை. மத்​திய அரசின் இந்​தப் போக்கு கண்​டித்​தக்​கது. எங்​கள் பொதுச்​செய​லா​ளர் இபிஎஸ் அவர்​கள், “நி​யாய​மாக தமி​ழ​கத்​திற்கு தரவேண்​டிய நிதியை விடுவிக்க வேண்​டும்” என்று வேண்​டு​கோள் வைத்​திருக்​கி​றார்.

    அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் தற்போது அக்கட்சி பலவீனமாக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே?

    இந்​தக் கேள்விக்கே இடமில்​லை. ஏனெனில், அதி​முக-​வில் எந்​தப் பிள​வும் இல்​லை. அதி​முக பலவீன​மாக​வும் இல்​லை. 2026 சட்​டமன்​றத் தேர்​தலை சந்​திப்​ப​தற்கு தயா​ரான நிலை​யில் அதி​முக உள்​ளது.

    ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் கட்சிக்குள் சேர்க்காவிட்டால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்கிறார்களே?

    இது சரி​யான கணிப்பு இல்​லை. தனிமனிதர்​களை விட அதி​முக தொண்​டன் கட்​சி​யின் வெற்​றியைத்​தான் பெரி​தாக மதிப்​பான். எனவே, 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எந்த பின்​னடைவுமின்​றி, அதி​முக வெற்​றிக்​கொடி நாட்​டும்.

    ஆளும் திமுக தனது கூட்டணியை உறுதியாக வைத்து தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக இன்னும் கூட்டணியையே கட்டமைக்கவில்லையே?

    அதி​முக தனித்து நின்றே வெற்றி பெரும் ஆற்​றல் உடைய கட்​சி. ஏற்​கென​வே, 2016 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 234 தொகு​தி​களி​லும் அனை​வரை​யும் இரட்டை இலைச்​சின்​னத்​தில் போட்​டி​யிடச் செய்து வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்த கட்​சி. அதி​முக. மைக்ரோ லெவல் ஆபரேஷன் செய்து தமிழ்​நாடு முழு​வதும் பூத் கமிட்​டிகளை வெற்​றிகர​மாக அமைத்​துள்​ளது. ஆட்​சி​யைப் பிடிப்​ப​தற்கு இந்த பலமே போது​மானது. மேலும், கூட்​டணி அமைப்​ப​தற்​கும் அதை உறு​திப்​படுத்​து​வதற்​கும் இன்​னும் கால அவகாசம் இருக்​கிறது. உரிய காலத்​தில் அதி​முக அதை செய்து முடிக்​கும்.

    ஆனால், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதியாகச் சொல்கிறாரே ஸ்டாலின்?

    இந்​தத் தேர்​தலில் திமுக வெற்றி பெறு​வது மிகக் கடினம். சட்​டம் – ஒழுங்கு நில​வரத்​தைப் பார்த்து நடுநிலை​யாளர்​களே அச்​சப்​படு​கின்​ற​னர். கடலை மிட்​டாய் விற்​பது போல் கஞ்சா விற்​கப்​படு​கிறது. ஸ்டா​லின் நல்​லது செய்ய நினைத்​தா​லும் கீழ் மட்​டத்​தில் இருப்​பவர்​கள் அவரைச் செய்​ய​வி​டா​மல் இழுத்​தடிக்​கின்​ற​னர். எதிர் காலத்​தில் துரை​முரு​கன், நேரு, பொன்​முடி, எ.வ.வேலு, வெள்​ளக்​கோ​யில் சாமி​நாதன் போன்​றவர்​களால் தனது மகனுக்கு ஆபத்து வரலாம் என நினைக்​கும் ஸ்டா​லின், இம்​முறை திமுக வென்றால் மகனை முதல்​வ​ராக்​கி​விடும் திட்​டத்​தில் இருக்​கி​றார். ஆனால், அது நடக்​காது.

    பாஜக – அதிமுக கூட்டணியை அமித் ஷா அறிவித்து மூன்று மாதங்கள் ஆகியும் இரு கட்சிகளுக்கும் இன்னும் ஒருங்கிணைப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லையே?

    தமிழ்​நாட்டை பொறுத்​தவரை கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கப் போவது அதி​முக தான். கூட்​ட​ணி​யின் தலை​வர் இபிஎஸ் தான். இதில் எந்த மாற்​றுக்​கருத்​துக்​கும் இடமில்​லை. இதை பாஜக ஏற்​க​வில்லை என்​றால் இரு​கட்​சிகளுக்​கு​மான ஒருங்​கிணைப்பு சாத்​தி​யமில்​லை.

    அதிமுக ஆட்சியிலும் கட்சியிலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே..?

    அதி​முக-​வில் சிறு​பான்மை சமூகத்​தினருக்கு உரிய முக்​கி​யத்​து​வம் காலம் கால​மாக தரப்​பட்டு வருகிறது. எனவே, இந்தக் குற்​றச்​சாட்​டில் உண்மை இல்​லை.

    – ஆர்.ஷபிமுன்னா / கி.தனபாலன்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பட்டாசு ஆலைகளில் விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி

    July 6, 2025
    மாநிலம்

    மூடப்பட்ட 500+ அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

    July 6, 2025
    மாநிலம்

    பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துவதில்லை – ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

    July 6, 2025
    மாநிலம்

    சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சாதித்தது என்ன? – தமிழக அரசு விளக்கம்

    July 6, 2025
    மாநிலம்

    ‘ரிதன்யாவின் ஆடியோ சாட்சியங்களை யாராலும் உடைக்க முடியாது’ – பொன்மாணிக்கவேல் நேரில் ஆறுதல்

    July 6, 2025
    மாநிலம்

    ”96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை; 9,000 பேராசிரியர் பணியிடங்கள் காலி” – அரசுக்கு அன்புமணி கண்டனம்

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4ம் இடத்தில் இந்தியா: உலக வங்கி அறிக்கை
    • மதநல்லிணக்க திருவிழா | மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் @ ராமநாதபுரம்
    • பட்டாசு ஆலைகளில் விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி
    • 10 அழகான செல்ல நாய் இனங்கள் நம்பமுடியாத நுண்ணறிவுக்கு பெயர் பெற்றவை
    • ”இந்தி மொழியை அல்ல; இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்” – சஞ்சய் ராவத் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.