Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு எதிரான ஜிஎஸ்டி ஆணையரக உத்தரவுக்கு இடைக்கால தடை
    மாநிலம்

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு எதிரான ஜிஎஸ்டி ஆணையரக உத்தரவுக்கு இடைக்கால தடை

    adminBy adminMay 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு எதிரான ஜிஎஸ்டி ஆணையரக உத்தரவுக்கு இடைக்கால தடை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஜிஎஸ்டி வரி 285 கோடி ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரி, 285 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 342 ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி, ஜிஎஸ்டி ஆணையரகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

    அந்த மனுவில், “மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர் என்ற முறையில் அரசு கேபிள் டிவி கழகம், தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கும். உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அந்த சிக்னல்களை நுகர்வோர்களுக்கு வழங்குகிறது. நுகர்வோர்களிடமிருந்து உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வசூலிக்கும் தொகையில், அரசு கேபிள் டிவி கழகம், சம வருமானத்தை பெறுகிறது. அதற்கான ஜிஎஸ்டி வரி, எந்த பாக்கியும் இல்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.

    உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அவர்களுக்கான ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும். அதற்கு அரசு கேபிள் டிவி கழகம் பொறுப்பாகாது. எனவே, 285 கோடி ரூபாய் வரியை அபராதத்துடன் சேர்த்து ரூ.570 கோடி செலுத்தும்படி ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.” என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வருமானத்தை, அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாக கருத முடியாது. ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த நோட்டீஸுக்கு உரிய பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று வாதிட்டார்.

    இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 285 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அன்புமணி திடீர் டெல்லி பயணம்

    June 30, 2025
    மாநிலம்

    ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

    June 30, 2025
    மாநிலம்

    தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    June 30, 2025
    மாநிலம்

    நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்

    June 30, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

    June 30, 2025
    மாநிலம்

    காவல் நிலைய மரணங்களுக்கு போலி கண்ணீர் தாண்டி முதல்வரின் பதில் என்ன? – டிடிவி தினகரன்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கடின உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம்: உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்ச்சியில் போட்டித் தேர்வர்கள், மாணவர்களுக்கு அறிவுரை
    • அன்புமணி திடீர் டெல்லி பயணம்
    • எலும்புகளை வலிமையாக்க உடலுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துக்கள்
    • ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்
    • தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.