Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதி கண்களை வி.பி.சிங்கின் ஆன்மா திறக்கட்டும்” – அன்புமணி
    மாநிலம்

    “தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதி கண்களை வி.பி.சிங்கின் ஆன்மா திறக்கட்டும்” – அன்புமணி

    adminBy adminJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதி கண்களை வி.பி.சிங்கின் ஆன்மா திறக்கட்டும்” – அன்புமணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளில், தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதி கண்களை அவரது ஆன்மா திறக்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமூகநீதிக்கான பெருந்தலைவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் 95-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி செயல்படுத்தியதற்காக நாமும், நமது பல தலைமுறையினரும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அவரது பிறந்தநாளில் அவரது சமூகநீதிப் பார்வையையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவுகூர்ந்து அவரை வணங்குகிறேன்.

    வழக்கமான ஆட்சியாளர்களுக்கும், வி.பி.சிங்குக்கும் இடையிலான வேறுபாடு இமயத்தை விட பெரிதானது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூக நீதியை பலி கொடுப்பவர்கள்; ஆனால், வி.பி.சிங் சமூகநீதியைக் காப்பதற்காக ஆட்சியைப் பலி கொடுத்தவர். அதனால் தான் அவரது தியாகம் மிகப்பெரியது ஆகும்.

    பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். தேசிய அளவில் அது சாத்தியமாவதற்கு மத்திய அரசு விரைவில் நடத்தவிருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு வகை செய்யக்கூடும்.

    ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு அது குறித்த பார்வையே இல்லாததால் அதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் அவரது ஆன்மா தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதிக் கண்களை திறக்க வகை செய்யட்டும்” எனத் தெரிவித்துள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி

    July 1, 2025
    மாநிலம்

    காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    மாநிலம்

    நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு

    July 1, 2025
    மாநிலம்

    திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி
    • லூயிஸ் உய்ட்டன் ஆட்டோ ரிக்ஷா பை: ஆட்டோரிக்ஷா பைக்கு வழிவகுக்கவும்: எல்வியின் தைரியமான அஞ்சலி இன்னும் இந்தியாவுக்கு! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.என்.எஸ்.ஏ பூமி மற்றும் சந்திரனின் படங்களை டயான்வென் -2 ஆல் 590,000 கி.மீ ஆழத்தில் வெளியிடுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திரைப் பார்வை: மார்கன் | ஓர் இரக்கமற்ற படத்தொகுப்பாளரின் நெத்தியடி!
    • காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.