Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக அரசின் எரிஉலை திட்டங்களை தடுக்க சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம்: அன்புமணி
    மாநிலம்

    தமிழக அரசின் எரிஉலை திட்டங்களை தடுக்க சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம்: அன்புமணி

    adminBy adminJune 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக அரசின் எரிஉலை திட்டங்களை தடுக்க சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம்: அன்புமணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், தமிழ்நாடு அரசின் எரிஉலை (incinerator) திட்டங்களை தடுக்கவும் சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972-ம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ (Beat Plastic Pollution) என்பதை 2025 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிரான ஐநா ஒப்பந்த (UN Global Plastics Treaty) பேச்சுவார்த்தை கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி, 2024 வரை உருகுவே, பிரான்ஸ், கென்யா, நைரோபி, தென் கொரியா ஆகிய நாடுகளில் 5 முறை நடந்தது. கடைசியில் தோல்வியில் முடிந்தது.

    இந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஐநா பிளாஸ்டிக் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் தொடங்குகின்றன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவ்வாண்டின் சுற்றுச்சூழல் நாள் முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் மாசுபாடு ஒரு பேராபத்து. சுற்றுச்சூழல் கேடுகள், நீர்வள அழிவு, நகர்ப்புற வெள்ள பாதிப்பு, விவசாய பாதிப்பு, உயிரிப்பன்பய அழிவு, கடல்வள அழிவு, பறவைகள் அழிவு, காலநிலை மாற்றம் என எண்ணற்றக் கேடுகள் பிளாஸ்டிக் மாசுபாட்டால் நேருகின்றன.

    பிளாஸ்டிக் மாசுபாடு மனிதர்களின் உணவுச் சங்கிலியில் இணைவதாலும், தண்ணீர் மற்றும் காற்று மாசுபாட்டை உருவாக்குவதாலும் பலவகை உடல்நலக் கேடுகளுக்கு காரணமாக உள்ளது. உலகை காக்க பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டியது ஒழிப்பு ஒரு இன்றியமையாத தேவை ஆகும். உலகளாவிய, முழுமையான பிளாஸ்டிக் ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் அவை உடனடியாக உருவாக்க வேண்டும். குறிப்பாக, ஐநா பிளாஸ்டிக் ஒப்பந்தம் உலக நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்த வேண்டும்.

    பிளாஸ்டிக் உற்பத்தி முதல் கடலில் கலக்கும் மாசு வரை, முழு வாழ்க்கை சுழற்சியை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை வெளிப்படையாக உறுதி செய்யும் வழிகள் இருக்க வேண்டும். ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான பன்னாட்டு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு முழுமையான பிளாஸ்டிக் ஒப்பந்தத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும்.

    பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாகக் கூறி, பிளாஸ்டிக் குப்பையை எரிக்கும் எரிஉலை (incinerator) திட்டத்தை 1,026 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    இது ஒரு ஆபத்தான திட்டம் ஆகும். காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்பமடைய காரணமான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், தமிழ்நாடு அரசின் எரிஉலை (incinerator) திட்டங்களை தடுக்கவும் சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்படுகிறது: கட்சி நிர்வாகிகள் கூட்டாக பேட்டி

    July 1, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி: முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்

    July 1, 2025
    மாநிலம்

    ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 

    July 1, 2025
    மாநிலம்

    காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணி: அரசு அமைத்த குழுவை அணுக ஐகோர்ட் உத்தரவு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்
    • இந்த மாலை உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அல்சைமர் ஆபத்தை அதிகரிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?
    • பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்படுகிறது: கட்சி நிர்வாகிகள் கூட்டாக பேட்டி
    • ஆப்டிகல் மாயை: 4502 களின் மத்தியில் மறைக்கப்பட்ட 4052 ஐக் கண்டறியவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.