சென்னை: தமிழகத்தில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் இன்று கோப்பைகளை வழங்கவுள்ளார். ஆண்டுதோறும் செப். 6-ம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
1859-ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப். 6-ம் தேதியை அடிப்படையாக வைத்து காவலர் நாள் கொண்டாடப்படும். அன்றைய தினம் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் கோப்பை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான சிறந்த 3 காவல் நிலையங்களாக மதுரை எஸ்எஸ் காலனி, திருப்பூர் டவுன், திருத்தணி என 3 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தின விழாவின்போது முதல்வர் ஸ்டாலினால் கோப்பை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் முதல்வர் கோப்பைக்காக சிறந்த 46 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னையை பொருத்தவரை முத்தியால்பேட்டை, மதுரவாயல், ஐஸ்ஹவுஸ், மடிப்பாக்கம் ஆகிய 4 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் நகரங்களில் தாம்பரத்தில் சங்கர் நகர், ஆவடியில் எண்ணூர், கோவையில் காட்டூர், திருச்சியில் துறைமுகம் சட்டம் ஒழுங்கு, சேலத்தில் அன்னதானபட்டி, திருநெல்வேலியில் பெருமாள்புரம் ஆகியவை தேர்வாகியுள்ளன.
இதுபோக, வடக்கு மண்டலத்தில் செங்கல்பட்டு டவுன், காஞ்சி தாலுகா, கோட்டகுப்பம், பண்ருட்டி, கச்சிராயபாளையம், வேலூர் வடக்கு, போளூர், திருப்பத்தூர் டவுன், வாலாஜா, மேற்கு மண்டலத்தில் ஓமலூர், கரூர், நாமக்கல் டவுன், கிருஷ்ணகிரி டவுன், மேட்டுப்பாளையம், ஈரோடு தெற்கு, ஊட்டி டவுன் சென்ட்ரல், உடுமலைப்பேட்டை, மத்திய மண்டலத்தில் மண்ணச்சநல்லூர், அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், பெரம்பலூர், கரூர் டவுன், தஞ்சாவூர் டவுன் கிழக்கு, வெளிப்பாளையம், திருத்துறைப்பூண்டி, சீர்காழி, தெற்கு மண்டலத்தில் உசிலம்பட்டி டவுன், மல்லாங்கிணறு, திண்டுக்கல் டவுன் வடக்கு, கூடலூர் வடக்கு, கமுதி, சிவகங்கை டவுன், முன்னீர்பள்ளம், கோவில்பட்டி மேற்கு, பாவூச்சத்திரம், இரணியல் என 46 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல்வரின் சார்பில் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் டிஜிபி அலுவலகத்தில் இன்று காலை கோப்பைகளை வழங்குகிறார்.