Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடம்: அன்புமணி வேதனை
    மாநிலம்

    தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடம்: அன்புமணி வேதனை

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடம்: அன்புமணி வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராணிப்பேட்டை: “தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களைவிட, வட மாவட்டங்கள் டாஸ்மாக் மது விற்பனையில் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் திருமண மண்டபம் திறப்பு விழா இன்று (ஏப்.30) நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, திருமண மண்டபத்தை திறந்து வைத்து பேசுகையில், “மாமல்லபுரத்தில் மே 11-ம் தேதி சித்திரை முழு நிலவு, பாமக வன்னியர் இளைஞர் பெருவிழா மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    குறிப்பாக தம்பி, தங்கைகள் அதிகமாக பங்கேற்க வேண்டும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே அனைவருக்கும் சமூக நீதி என்பதாகும். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். இந்தக் கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு, அவரவர் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும்.எனவே தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும்.

    மேலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்கள் உள்ளது. இதில், 20 மாவட்டங்கள் மிகமிக பின் தங்கியுள்ளது. இந்த பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து அந்த மாவட்டங்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டும். இதில் 15 மாவட்டங்கள், வட மாவட்டங்களாக உள்ளது. இங்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்தும் பின்தங்கி உள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளின் மதுவிற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

    மேலும், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள மாநாட்டின் முக்கிய கோரிக்கைகளாக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்று பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்,” என்றார். இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

    June 28, 2025
    மாநிலம்

    “ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” – அன்புமணி ஆவேசம்

    June 28, 2025
    மாநிலம்

    ”தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20% ஆசிரியர்கள் இல்லை” – நயினார் நாகேந்திரன்

    June 28, 2025
    மாநிலம்

    உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    June 28, 2025
    மாநிலம்

    புதுவை மாநில பாஜக தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல்

    June 28, 2025
    மாநிலம்

    பாஜகவுக்கு மீனவர் நலனில் கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: கைகள் அல்லது மூளை? நீங்கள் முதலில் பார்ப்பது மிகவும் நம்புகிறீர்கள் அல்லது மற்றவர்களை சந்தேகிக்கிறீர்கள் என்றால் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்
    • “ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” – அன்புமணி ஆவேசம்
    • சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.