Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை – அரசுக்கு அன்புமணி கண்டனம்
    மாநிலம்

    தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை – அரசுக்கு அன்புமணி கண்டனம்

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை – அரசுக்கு அன்புமணி கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, குற்றங்களை மூடி மறைப்பதிலும், பிரச்சினைகளை திசை திருப்புவதிலும் தான் ஆர்வம் காட்டுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் தொடங்கி தென்காசி – தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் 8 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பல கொலைகளுக்கு மது தான் காரணமாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசும், அதன் காவல்துறையும் படுதோல்வி அடைந்து விட்டன என்பதைத் தான் இந்த படுகொலைகள் காட்டுகின்றன.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மது குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பிரகதீஸ்வரன் என்ற இளைஞரும், அவரது கொலைக்கு பழிவாங்க கஸ்தூரி என்ற பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவிரியில் மதுக்கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட போட்டியில் விஜய் என்பவர் கொல்லப்பட்டார்.

    அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் அம்பலச்சேரியில் சுயம்புகனி, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உமா, விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே ராஜசேகரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தில் அஸ்வினி, கடலூர் மாவட்டம் சின்ன கங்கணாங்குப்பத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் என மொத்தம் 8 பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் படுகொலைகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் கூட படுகொலை செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இதனால் மாநிலத்தின் எந்த பகுதியிலும் மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    படுகொலைகள் உள்ளிட்ட பெரும்பான்மையான குற்றங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தான் காரணமாக உள்ளன. ஆனால், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், போதைப்பொருள்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த அக்கறையும் திமுக அரசுக்கு இல்லை.

    தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிக கொலைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் இதே போன்று படுகொலைகள் நடைபெற்ற போதெல்லாம் அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. ஆனால், கொலைகளை கட்டுப்படுத்தி, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, குற்றங்களை மூடி மறைப்பதிலும், பிரச்சினைகளை திசை திருப்புவதிலும் தான் ஆர்வம் காட்டுகிறது.

    மக்களைப் பாதுகாப்பதும், சட்டம் – ஒழுங்கை நிலை நிறுத்துவதும் தான் ஆளும் அரசின் முதல் கடமை . ஆனால், அந்தக் கடமையை செய்யத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாகக் கூறிக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    முதல்வரும், அவர் கட்டுபாட்டில் இயங்கும் காவல்துறையும் இயல்பு நிலைக்கு திரும்பி சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

    June 30, 2025
    மாநிலம்

    காவல் நிலைய மரணங்களுக்கு போலி கண்ணீர் தாண்டி முதல்வரின் பதில் என்ன? – டிடிவி தினகரன்

    June 30, 2025
    மாநிலம்

    புதியவர்களுக்கு முழு ஒத்துழைப்பு: புதுச்சேரி பாஜக மாநில செயற்குழுவில் உத்தரவு

    June 30, 2025
    மாநிலம்

    திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வருக்கு பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்

    June 30, 2025
    மாநிலம்

    44-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை: காவிரி ஆற்றில் 58,000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

    June 29, 2025
    மாநிலம்

    வீரப்பனுக்கு மணிமண்டபம்: அமைச்சரிடம் முத்துலட்சுமி கோரிக்கை

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு
    • தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
    • அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்
    • ‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!
    • காவல் நிலைய மரணங்களுக்கு போலி கண்ணீர் தாண்டி முதல்வரின் பதில் என்ன? – டிடிவி தினகரன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.