விருதுநகர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 1,343 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு தொழில்நுட்ப பணிகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. நேர்காணல் அல்லாத பணிகளுக்காக இத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மே மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 2,048 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 699 பேர் தேர்வெழுதவில்லை. 1,343 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க அனைத்து தேர்வு மையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.