Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு
    மாநிலம்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு

    adminBy adminJuly 13, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் குரூப் 4 தேர்வு நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. சுமார் 11.18 லட்​சம் பேர் தேர்வை எழுதி உள்​ளனர். எத்​தனை தேர்வு மையங்​கள், எத்​தனை ஆயிரம் பணி​யாளர்​கள், எத்​தனை லட்​சம் தேர்​வர்​கள்.. அனை​வரை​யும் ஒருங்​கிணைத்து மிகுந்த கவனத்​துடன் தேர்​வாணை​யம் செயல்​பட்டு இருக்​கிறது. ஆணை​யத்​துக்கு மனமார்ந்த வாழ்த்​துகள்.

    டிஎன்​பிஎஸ்சி தேர்வு குறித்து பல குற்​றச்​சாட்​டு​கள், விமர்​சனங்​களை பலர் எழுப்​பலாம். அதன் உண்​மைத் தன்​மைக்​குள் செல்ல விரும்​ப​வில்​லை. ஆனால், தேர்​வுக்​கான ஏற்​பாடு​களைப் பொருத்​தமட்​டில் பெரி​தாகக் குறையேதும் இல்லை என்​பதே உண்​மை. தேர்வு எழு​திய பல இளைஞர்​களைத் தொடர்பு கொண்டு விசா​ரித்​த​தில், எல்​லாத் தேர்வு மையங்​களி​லும் ஏற்​பாடு​கள் சிறப்​பாக இருந்​த​தாகவே கூறி​னார்​கள். இந்த வெற்​றிக்​குப் பின்​னால் இருக்​கும் திட்​ட​மிடல், உழைப்​பு,அர்ப்​பணிப்பு பாராட்​டுக்கு உரியது.

    இனி… வினாத்​தாள்!

    தமிழ், பொது அறிவு என இரண்டு பிரிவு​கள்; ஒவ்​வொன்​றி​லும் 100 வினாக்​கள்; ஒவ்​வொன்​றுக்​கும் ஒன்​றரை மதிப்​பெண்​கள்; இரு பிரிவு​களும் சேர்த்து 300 மதிப்​பெண்​கள். ஆமாம். அது என்ன ஒன்​றரை மதிப்​பெண்? ஒவ்​வொரு விடைக்​கும் ஒரு மதிப்​பெண் என்று இருக்​கலாமே. அது என்ன ஒன்​றரை? இது என்ன ‘லாஜிக்’? ஆணை​யம் சற்றே விளக்​கி​னால் நலமாய் இருக்​கும்.

    இரண்டு பகு​தி​களி​லுமே பழகிய பாதை​யில், பழகிய வினாக்​கள். அதி​லும், தமிழ் மொழிப் பிரிவு, இளம் தேர்​வர்​களைப் பல பத்​தாண்​டு​களுக்​குப் பின்​னுக்கு இழுக்​கிறது. நாளுக்கு நாள் வெகு வேக​மாக மாறிவரும் அறி​வியல் தொழில்​நுட்ப தேவை​களுக்கு ஏற்ப தன்​னைத் தகவ​மைத்​துக் கொள்​ளும் திறன், மிக நிச்​சய​மாக, நம் தமிழுக்கு இருக்​கிறது. இதையெல்​லாம் கவனத்​தில் கொள்​ளாமல், ‘இலக்​கணம்’ என்​கிற குடு​வைக்​குள் இளம் தலை​முறை​யின் தாய்​மொழி அறிவை அடைக்க முயற்​சிப்​பது ஏன்?

    அரசு நிர்​வாகத்​தில் பங்​கேற்று மக்​களுக்கு சேவை செய்ய வேண்​டிய இளம் பணி​யாளர்​களுக்​கு, வினாத்​தாள் எதிர்​பார்க்​கும் அறி​வு, எந்த வகை​யில் பயன் உள்​ள​தாக இருக்​கும்? தமிழ்ப் பிரிவு வினாக்​களில் காணப்​படும் கடும் வறட்​சி, நம்மை அதிர்ச்​சிக்கு உள்​ளாக்​கு​கிறது. முனைமம், நீட​னு​போகம், ஓலக்​கம், கக்​கல் கரிசல், அணி​கம், அநிகம், அனிகம், செற்​றம், முரல், வரு​வி, வாளை, வியாளம்.. இவற்​றையெல்​லாம் மீட்​டெடுக்​கும் முயற்​சி​யில் தவறில்​லை. ஆனால் அதற்​கான களம் இது​வல்ல. இதனை ஏனோ ஆணை​யம் உணர்ந்து கொள்ள மறுக்​கிறது.

    இதற்கு அப்​பால், இப்​பிரி​வில் அறி​வார்ந்த வினாக்​களும் ஏராள​மாக இடம் பெற்​றுள்​ளன. ‘தகு​தி​யான் வென்று விடல்’ எனும் குறளில், ‘தகு​தி​யான்’ என்​ப​தன் பொருள் என்ன? ‘வேளைப்​பிசகு’ என்​றால் என்ன? ‘அழக்​கொண்ட எல்​லாம் அழப் போம்’ என்​ப​தற்கு இணை​யான பழமொழி யாது?

    ‘மண்​ணோடு இயைந்த மரத்​தனையர்’ என்று குறள், யாரைச் சுட்​டு​கிறது? தோழர் என்​னும் பொருள் தரும் ‘காம்​ரேட்’ எனும் சொல் எந்த மொழியைச் சேர்ந்​தது? உள்​ளிட்ட வினாக்​கள், உண்​மை​யில் தரமானவை​தாம்.

    பொது​வாக, மொழிப் பிரி​வில் சுவாரசி​ய​மான கேள்வி எது​வும் எதிர்​பார்க்க இயலாது​தான். ஆனால் ஓர் இன்ப அதிர்ச்​சி​யாக அப்​படியொரு வினா கட்​டுரை நிறை​வில் பார்ப்​போம். அரைப் புள்​ளி, கால் புள்ளி இடு​தல், அகர வரிசைப்​படி சொற்​களை சீர் செய்​தல், உவமை​களை விளக்​குதல், ஆங்​கில கலைச் சொற்​களுக்கு இணை​யான தமிழ்ச் சொல் கண்​டறிதல் ஏற்​புடைய​தாகவே இருந்​தன. ஆனாலும், காலத்​துக்கு ஒவ்​வாத, நிகழ் வாழ்​வுக்​குத் தேவைப்​ப​டாத பொருத்​தமற்ற அம்​சங்​கள், விரவிக் கிடக்​கின்​றன. இளம் தலை​முறைக்கு இவ்​வகைக் கேள்வி​கள் பெரும் சவாலாக இருந்​திருக்​கக் கூடும். கட்​டா​யம் தவிர்த்து இருக்​கலாம்.

    அடுத்​து, பொது அறி​வு. வினாத்​தாள் இதனை, ‘மனக்​கணக்கு நுண்​ணறி​வு’ என்​கிறது! பஞ்​சமி நிலங்​கள், தமிழகத்​தின் முந்​தைய நிதி அமைச்​சர்​கள், ‘கால வரிசைப்​படி’ விருதுகள், தேர்​தல் வாக்​குப்​ப​திவு இயந்​திரம், அகழ்​வா​ராய்ச்சி நடை​பெற்ற ஊர்​கள், உச்ச நீதி​மன்ற நீதிபதி நியமனம், பஞ்​சா​யத்து ராஜ் குழுக்​கள், நெல் சாகுபடி, மதுரை மில் வேலை நிறுத்​தம், பணவீக்​கக் காரணம், புற்​று​நோய் சிகிச்சை தொடர்​பான வினாக்​கள், பாராட்​டும்​படி இருந்​தன.

    நில அளவைப் புத்​தகத்​தில் உள்​ளபடி ஒரு பதி​வைத் தந்​து, நிலத்​தின் பரப்​பளவு என்ன? என்​கிற கேள்வி – அசத்​தல்! தமிழ்​நாடு ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புத் துறை​யின் இலவச அழைப்பு எண்.. பயனுள்ள கேள்​வி. தமிழ்த் தாத்தா உ.வே.சாமி​நாதர் என்று சாதிய அடை​யாளம் இன்றி விளித்​ததைப் பாராட்​டலாம். ஆனால் இதே வினாத்​தாளில், டாக்​டர் நடேச முதலி​யார், பகவான் பகதூர் பவானந்​தம் பிள்ளை என இடம்​பெற்று இருப்​பதை ஆணை​யம் சற்றே கவனித்​துத் திருத்தி இருக்​கலாம்.

    இல்​லம் தேடிக் கல்​வி, விடியல் பயணம் மற்​றும் வழக்​க​மான ‘கொள்கை சார்’ கேள்வி​கள்​… ‘இப்​படித்​தான் இருக்​கும்’ என்று நம்மை நாமே சமா​தானம் செய்து கொள்ள வேண்​டியது​தான். குடியரசு நாள் விழா​வில் பங்​கேற்ற அயல் நாட்​டுத் தலை​வர்​கள், வெவ்​வேறு சட்​டங்​கள் இயற்​றப்​பட்ட ஆண்​டு​கள், வட, தென், கிழக்​கு, நடு திரா​விட மொழிகள் போன்ற வினாக்​கள், சிலருக்​குக் கடின​மாக இருந்​திருக்​கலாம். அதே​நேரம், இராமலிங்க அடிகளார், கட்​ட

    பொம்​மன், வெற்​றிவேற்கை நன்​னெறி நல்​வழி நீதிநெறி விளக்​கம் நூலாசிரியர்​கள், தனி வட்​டி, கூட்டு வட்டி தொடர்​பான வினாக்​கள் எல்​லோருக்​கும் மிகுந்த மன ஆறு​தல் தந்​திருக்​கும்.

    சிந்து நாகரி​கம், ஜாலியன் வாலா​பாக் சம்​பவம், பிரம்ம ஞான சபை, பல்​ல​வர் குடைவரைக் கோயில்​கள், மக்​கள் தொகைப் பெருக்​கம், வறுமை ஒழிப்​புத் திட்​டங்​கள், நோய்​கள் – பாதிப்​பு​கள், ஜிஎஸ்டி நோக்​கம், பொதுக்​கணிதக் கேள்வி​கள்.. ‘இவ்​வளவு​தா​னா? இதற்கு மேல் எது​வும் இல்​லை​யா?’ என்று யோசிக்க வைக்​கிறது.

    மொத்​தத்​தில் டிஎன்​பிஎஸ்சி குரூப் 4 வினாத்​தாள், ‘புது​மை’ ஏதும் இன்றி முற்​றி​லும் பழைய, பழகிய பாதை​யிலேயே பயணித்​து, தேர்​வர்​களைச் சோர்​வடையச் செய்​துள்​ளது. வினாத்​தாள் தயாரிப்​பில், ஆரோக்​கிய​மான மாற்​றங்​களைக் கொண்​டுவர ஆணை​யம் பரிசீலித்​தல், மிக நல்​லது.

    நிறை​வாக, இரண்டு – சுவாரஸ்​ய​மான வி​னாக்​கள்:

    திரு​வள்​ளுவர் உரு​வத்​தினை முதன்​ முதலில்​ ஓவிய​மாக வரைந்​தவர்​ யார்​?

    பொருந்​தா இணை​யைக்​ கண்​டறிக. ஏ-எ; த-ந; ஐ-அ; ற-ன.

    கண்​டு​பிடித்​து விட்​டீர்​களா..? ச​பாஷ்!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மேட்டூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: பாசனத்துக்கு 22,500 கன அடி நீர் திறப்பு

    July 13, 2025
    மாநிலம்

    ‘சாரி மா மாடல் சர்க்கார்’ – அஜித்குமாருக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் திமுக மீது விஜய் விமர்சனம்

    July 13, 2025
    மாநிலம்

    பொது கலந்தாய்வு மூலமாக 405 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கல்

    July 13, 2025
    மாநிலம்

    புதிதாக பணியில் சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை: பிஎப் மண்டல ஆணையர் தகவல்

    July 13, 2025
    மாநிலம்

    பாதுகாப்பு துறை ஓய்வூதியர்களுக்காக 12 மாவட்டங்களில் நேரடி குறைதீர் மையங்கள்

    July 13, 2025
    மாநிலம்

    லெவல் கிராசிங்கில் கேட் கீப்பர்கள் மிக கவனமாக பணியாற்ற வேண்டும்: ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உறவுகள் மற்றும் வெற்றியை ரகசியமாக வடிவமைக்கும் ஆச்சரியமான சட்டங்கள் – இந்தியாவின் நேரங்கள்
    • ரி-ரிலீஸ் ஆகிறது தனுஷின் ‘புதுப்பேட்டை’!
    • மேட்டூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: பாசனத்துக்கு 22,500 கன அடி நீர் திறப்பு
    • சம்மர் ஹிகாரு இறந்தார் எபிசோட் 2 அனிம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, இது விஷயங்கள் தவழும் போது அதை ‘காட்டு மற்றும் அமைதியற்றது’ என்று அழைக்கிறது
    • சுபன்ஷு சுக்லாவின் பயணம்: ரகசிய என்.டி.ஏ விண்ணப்பத்திலிருந்து போர் பைலட் வரை 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.எஸ்.எஸ்ஸில் இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் வரை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.