Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்ய வழக்கு: அரசு 3 மாதத்தில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்ய வழக்கு: அரசு 3 மாதத்தில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJune 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்ய வழக்கு: அரசு 3 மாதத்தில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் 30 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு 3 மாத காலத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்” என்றார்,

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.முருகவேல், ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு குற்றச்செயலிலும் அவர் ஈடுபடவில்லை. எனவே அவர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரினார்.

    அதையடுத்து நீதிபதிகள், ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அதேநேரம் மற்ற வழக்குகளில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீஸார் 3 மாதங்களில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

    July 2, 2025
    மாநிலம்

    ஆளுநர் ரவி டெல்லி பயணம்

    July 2, 2025
    மாநிலம்

    கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    July 2, 2025
    மாநிலம்

    அரசியல் அழுத்தம் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

    July 2, 2025
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

    July 2, 2025
    மாநிலம்

    வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால் ஆதரவற்று தவிக்கும் குடும்பம்

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது
    • வைரஸ் கச்சேரி வீடியோவில் பியோன்சின் மகள் ரூமி இல்லுமினாட்டி அச்சங்களைத் தூண்டுகிறார், குழந்தைகளை ஈடுபடுத்துவதற்காக நெட்டிசன்ஸ் ஸ்லாம் சிங்கர்
    • உணவுமுறை, எண்ணம் சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் மனிதர்கள் வாழலாம்: ராம்தேவ் கருத்து
    • ஆளுநர் ரவி டெல்லி பயணம்
    • லாரன் சான்செஸின் குழந்தைகளான நிக்கோ கோன்சலஸ், இவான் மற்றும் எல்லா வைட்செல்: முன்னாள் காதலன் மற்றும் முன்னாள் கணவருடன் அவரது மூன்று குழந்தைகளைப் பற்றி சந்திக்கவும்-டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.