சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், கவரைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் ஜூன் 9, 12 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு நாளையும் (9-ம் தேதி), வரும் 12-ம் தேதிகளில் காலை 10.30, 11.35 மணி, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டைக்கு காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05, சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.15, பிற்பகல் 3.10 மணி, இரவு 9 மணிக்கு மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு அதே நாட்களில் காலை 9.40, நண்பகல் 12.40, சூலூர்பேட்டை – நெல்லூருக்கு பிற்பகல் 3.50 மற்றும் சென்னை சென்ட்ரல் – ஆவடிக்கு இரவு 11.40, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு காலை 10.55, கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரலுக்கு அதே நாட்களில் மதியம் 1, பிற்பகல் 2.40, 3.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
பகுதி ரத்து: செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டிக்கு ஜூன் 9, 12 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி – தாம்பரத்துக்கு அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையேயும் பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு பதிலாக, அதே நாளில், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.