Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிறு, குறு  விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு, கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்: அன்புமணி
    மாநிலம்

    சிறு, குறு  விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு, கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்: அன்புமணி

    adminBy adminMay 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிறு, குறு  விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு, கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்: அன்புமணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சிறு, குறு விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல், தனியார் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணையை திரும்பச் செலுத்த 20 நாள்கள் தாமதமானதற்காக வங்கி ஊழியர்கள் திட்டியதால், மனம் உடைந்து நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. விவசாயி வடிவேலுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விவசாயி வடிவேல் வேளாண் பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து ரூ.4.80 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற இந்த கடனுக்கான தவணையை அவர் சரியாக செலுத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தவணையை செலுத்த முடியவில்லை. அதனால் அவரது வீட்டிற்கு சென்ற வங்கிப் பணியாளர்கள் அவரை மரியாதைக் குறைவாக திட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    கடன் தவணையை செலுத்தத் தவறும் அல்லது தாமதிக்கும் விவசாயிகளை திட்டுவதற்கோ, மிரட்டுவதற்கோ யாருக்கும், எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. கடன் தவணையை செலுத்த ஒருவர் தவறினால், அவருக்கு முறைப்படி அறிவிக்கை அனுப்பி அவரிடம் விளக்கம் பெற வேண்டும்; அவர் கடனை செலுத்த போதிய காலக்கெடு வழங்க வேண்டும்; அதன்பிறகும் அவர் கடனை செலுத்தவில்லை என்றால் மட்டும் தான் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    ஆனால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மதிக்காத தனியார் வங்கிகள் கந்துவட்டிக்காரர்களைப் போல நடந்து கொள்வது தான் உழவர்களின் தற்கொலைக்கு காரணம் ஆகும். இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. விவசாயி வடிவேலின் தற்கொலை தான் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும். இதற்கு மேலும் எந்த விவசாயியும் இதுபோல் தற்கொலை கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடனை திரும்பச் செலுத்தாதவர்களை மிரட்டினாலோ, வலுக்கட்டாயமாக வசூலித்தாலோ 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் தண்டம் விதிக்க வகை செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தாரா, இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதால் புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் உழவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது தான் இத்தகைய தனியார் வங்கிகளிடம் உழவர்கள் சிக்கிக் கொள்வதற்கு காரணம் ஆகும். எனவே, சிறு, குறு விவசாயிகளுக்கு தாரளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகள் இலக்கு: களப்பணியில் விருதுநகர் திமுக தீவிரம்!

    June 29, 2025
    மாநிலம்

    ‘விருதுநகரே விடைபெறுகிறேன்…’ – வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம்

    June 29, 2025
    மாநிலம்

    ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

    June 29, 2025
    மாநிலம்

    தேர்தல் கூட்டணி குறித்த தேமுதிக நிலைப்பாடு ஜனவரியில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

    June 29, 2025
    மாநிலம்

    கொடைக்கானல் மலை கிராமத்தில் 21 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    June 29, 2025
    மாநிலம்

    2026 தேர்தலை பாமக ஒரே அணியாக எதிர்கொள்ளும்: பொருளாளர் சையத் மன்சூர் உறுதி

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகள் இலக்கு: களப்பணியில் விருதுநகர் திமுக தீவிரம்!
    • பல் மருத்துவர்களின் கூற்றுப்படி, பற்களை ரகசியமாக அழிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘விருதுநகரே விடைபெறுகிறேன்…’ – வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம்
    • 477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!
    • ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.