கூடலூர் அருகே சமூக நீதி விடுதி என்ற பெயரை கருப்பு மையால் அழித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் அரசு துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகள் சமூகநல விடுதிகள் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளன. கள்ளர் விடுதிகளை சமூக நீதி என்று பெயர் மாற்றுவதை கண்டித்து, தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி விடுதி முன் கம்பம் நகர, ஒன்றிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் எழுதப்பட்டிருந்த சமூக நீதி விடுதி என்ற எழுத்துகளை கருப்பு மையால் அழித்தனர். தொடர்ந்து இந்த அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் தேவர் சமுதாய இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.