கோவை: கோவை கிராம ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, குப்பை பிரச்சினைகள் குறித்து ‘வாட்ஸ் அப்‘ மூலம் புகார் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பழுது மற்றும் குப்பைகள் அகற்றாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், மக்கள் எளிதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் புகார் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனைமலை (7402905234), அன்னுார் (9976550973), காரமடை (9786896660), கிணத்துக்கடவு (8778685349), மதுக்கரை (7402607284), பெரியநாயக்கன்பாளையம் (9976250205), பொள்ளாச்சி (தெற்கு) (7397581943), பொள்ளாச்சி (வடக்கு) (7402905266), சுல்தான்பேட்டை(7402905203), சூலுார் (7402905170), சர்க்கார்சாமக்குளம் (7402905147), தொண்டாமுத்துார் (7402905182). மேற்குறிப்பிட்ட எண்களில் மக்கள் புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் மூன்று தினங்களுக்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.