கடலூர்: ‘குறிஞ்சிப்பாடி அருகில் கொடுக்கன்பாளையத்தில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள லால்புரத்தில் எல்.இளையபெருமாளின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் வாழும் மகளிருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், குறிஞ்சிப்பாடி அருகில் இருக்கும் கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கர் பரப்பளவில், தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த தொழில் பூங்காவில், சுமார் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” எனத் தெரித்தார்