சென்னை: “மக்களோடு மக்களாக எளிய தலைவராக வாழ்ந்த காமராஜர் பிறந்தநாளில், மக்களை நாடி அரசு செல்லும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கதர்ச் சட்டை அணிந்து கருப்புச் சட்டைக்காரரின் பணிகளைச் செய்த கர்மவீரர் காமராஜர். தந்தை பெரியாரின் வழிகாட்டலில் ஆட்சி நடத்திய பச்சைத் தமிழர். திறமை என்பது பிறப்பால் வருவதல்ல, வாய்ப்பு கொடுத்தால் எவரும் பெறுவது என ஓங்கி உரைத்த பெருந்தலைவர்.
மக்களோடு மக்களாக எளிய தலைவராக வாழ்ந்த அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தி, மக்களை நாடி அரசு செல்லும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கதர்ச் சட்டை அணிந்து கருப்புச் சட்டைக்காரரின் பணிகளைச் செய்த கர்மவீரர் #காமராசர்!
தந்தை பெரியாரின் வழிகாட்டலில் ஆட்சி நடத்திய பச்சைத் தமிழர்!
திறமை என்பது பிறப்பால் வருவதல்ல, வாய்ப்பு கொடுத்தால் எவரும் பெறுவது என ஓங்கி உரைத்த பெருந்தலைவர்!
மக்களோடு மக்களாக எளிய தலைவராக வாழ்ந்த… pic.twitter.com/BH7vVjqbV1
— M.K.Stalin (@mkstalin) July 15, 2025