சென்னை: கரோனா தொற்று காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு டெல்லியைப்போல் தமிழகத்திலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா காலத்தில் பணியில் இறந்த 10 மருத்துவ பணி யாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி கருணை தொகை விரைவில் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
தொற்றுக்கு பயந்து உலகம் முழு வதும் ஸ்தம்பித்திருக்கும்போது இவர்கள் இரவும், பகலும் தங்கள் கடமைகளை செய்தனர். அவர்கள் பங்களிப்பு டெல்லியின் வர லாற்றில் மிகவும் தன்னலமற்ற அத்தியாயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார். கர்நாடகா வில் கரோனா பேரிடரின்போதே, அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரித்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப் படுவதாக அறிவித்தனர்.
தமிழகத்தில் அன்று மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவ ராகஇருந்தபோது, கரோனாபேரி டரின்போது பணியாற்றி உயிரிழக்கும் அரசு மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என குரல் எழுப்பினார். ஆனால் முதல்வராக பதவியேற்ற பிறகு, மாநில அரசு இன்று வரை 10 காசு கூட நிவாரணம் தரவில்லை.
இறந்த 11 மருத்துவர்களில் ஒரே ஒருவரான மருத்துவர் விவேகானந்தன் குடும்பம், அரசு வேலை கேட்டு கண் ணீருடன் முதல்வருக்கு வேண்டு கோள் விடுத்த பிறகும் இன்று வரை கருணை காட்டவில்லை. தமிழகத்தில் செயல்படுத்தப் படும் பல நல்ல திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருவதாக நம் முதல்வர் பெரு மையாகக் குறிப்பிடுகிறார். ஆனால் டெல்லி முதல் கர்நாடகா வரை அரசு மருத்துவர் களை அங்கீகரிக்கும்போது, தமிழகம் மட்டும் அரசு மருத்து வர்களை அங்கீகரிக்க மறுப்பது வேதனை.
அதனால், தமிழகத் தில் கரோனா பணியில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மறைந்த மருத்துவர் விவே கானந்தன் மனைவி திவ்யா வுக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அர சாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.