கரூரில் தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், பிரச்சார இடத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தவெக தலைவர் விஜய், கரூரில் நாளை பிரச்சாரம் செய்ய லைட்ஹவுஸ் முனை, உழவர் சந்தை உள்ளிட்ட 4 இடங்களை குறிப்பிட்டு போலீஸில் அனுமதி கோரியிருந்தனர். எத்தனை வாகனங்கள் வரும். எத்தனை பேர் கலந்துகொள்வர் உள்ளிட்ட விவரங்களை அளிக்குமாறு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேட்டனர். ஆனால், இதற்கு உரிய பதிலை வழங்காததால் விஜயின் பிரச்சார இடம் உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் நேற்று கரூர் லைட்ஹவுஸ் முனை, கரூர் வேலுசாமிபுரம் ஆகிய இரு இடங்களைப் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து. விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தை உறுதி செய்வதற்காக மாவட்ட காவல் அலுவலகத்துக்குச் சென்று மாவட்ட எஸ்.பி.ஜோஷ் தங்கையாவைச் சந்தித்தார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்திய பிறகு ஆனந்த் புறப்பட்டுச் சென்றார்.
கரூர் உழவர் சந்தை அருகே பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கினால், சின்னாண்டாங் கோவில் சாலை வழியாக விஜய் வர வேண்டும் என காவல் துறை சார்பில் தெரிவிக் கப்பட்டது. ஆனால், அந்தச் சாலை வழியாக வந்தால் மக்க ளைச் சந்திக்க முடியாது எனக் கூறி கோவை சாலை வழியாக வர அனுமதி வழங்க வேண் டும் என தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
பிரச்சார பயணத்தின் போது எத்தனை வாகனங்கள் வரும். எத்தனை பேர் கலந்து கொள்வர் என்ற விவரங்களை காவல் துறைக்கு வழங்கி விட்டதாகக் கூறப்படும் நிலையில், விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் இன்னும் உறுதி செய்யப்படாமல் சிக்கல் நீடிக்கிறது.