சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினமான ஆக.7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
7ம் தேதி காலை 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் அமைதிப் பேரணி நடக்கவுள்ளது.
இதன்படி அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்படுகிறது. பின்னர் வாலாஜா சாலை வழியாகச் சென்று காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.