சென்னை: கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். அந்நிகழ்ச்சியில், பிரதமர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ராஜேந்திர சோழனின் 1000ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், ராஜேந்திர சோழனின் நினைவாக நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளைத் தலைவர் ஆர். கோமகன், நாணையத்தைப் பெற்றுக்கொள்வார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அங்குள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கோயில் வளாகத்தில் சைவ மன்னர்களின் வெற்றிகள், கோப்பைகள், அவர்களின் சிறிய அளிவிலான சிற்பங்களைக் கொண்ட கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இசையமைப்பாளர் இளையராஜா 20 நிமிடங்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.