சென்னை: அறம் சார்ந்த என் அரசியல் பொது வாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது என வைகோவின் கருத்து குறித்து மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை வெளியிட்ட பதிவால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், அண் மைக் காலமாகக் கட்சியின் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இறுக்கமான முகத்துடன்தான் மல்லை சத்யா இருக்கிறார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, மதிமுகவிலிருந்து வருகிறேன் என அவர் சொல்வதில்லை. மாமல்லபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் என்றுதான் சொல்கிறார்.
பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார் என கூறியிருந்தார் இந்த கருத்து மதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மல்லை சத்யா சமுக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: மதிமுகவில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இது நாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை.
பிரபாகரனுக்கு புலிப்படை வீரன்மாத்தையா துரோகம் செய்ததை என்னோடு ஒப்பிட்டு வைகோ பேசினார். என் அரசியல் பொதுவாழ்க் கையில் என் தலைவர் வைகோவுக்கு எதிராக நான் செயல்பட்டேன் என்பது உண்மையானால் அரசியல் பிழைத்தோருக்குஅறமே கூற்றா கட்டும் என்ற நீதி நின்று நிலைத்து என்னை சுட்டெரிக்கட்டும்.
32 ஆண்டுகளாக, இரவு பகல் பாராமல் கட்சி பணியாற்றி வந்த என் மீது தன் மகன் துரையின் அரசியலுக்காக வைகோ அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்ட நாள் முதல் என்னால் தூங்க முடியவில்லை. என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே. அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே.
அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார். இதற்கிடையே தனியார் தொலைக்காட்சிக்கு இந்த விவாகரம் குறித்து பேசிய மல்லை சத்யா, ‘உலகமே என்னை கைவிட்டாலும், வைகோ என்னை கைவிடமாட்டார் என நம்பிக்கையாக இருந்தேன். என் பொது வாழ்கையை முடித்து வைக்க துரோகி என பட்டம் கொடுத்தது தீராத பழியை என் மீது சுமத்தி விட்டார்’ கண்ணீருடன் கூறினார்.