மதுரை: தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் பெறப்படும் மனுக்களில் பெரும் பாலானவை வருவாய்த் துறை தொடர்புடையதாக உள்ள தாகவும், மேலும் தொடர் முகாம்களால் வழக்கமான பணிகளை மேற்கொள்ள இயலாமல் ஓய்வின்றி பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டம், தமிழகம் முழு வதும் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கி வாரத்தின் 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. நவம்பர் வரை பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நகர்ப்புற பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறை கள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக இம்முகாம்களில் சாதிச் சான்று, பட்டா மாற்றம், ஓய்வூ தியம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமல், இம்முகாம்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளும் வகையில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் முருகையன் கூறுகையில், தேவையான கால இடைவெளி வழங்காமல் அளவுக்கு அதிகமான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அம்முகாம்களில் பெறப்படும் மனுக்களை விசாரணை செய்திட போதிய கால அவகாசம் வழங் காமல் கூடுதல் பணி நெருக்கடியை உணர்கிறோம்.
இது மட்டுமல்லாமல் வருவாய்த் துறையின் அன்றாட பொதுமக்கள் பணிகளையும், எவ்வித சுணக்கமும் இன்றி நிறை வேற்றுவதற்காக ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அரசின் அனைத்து திட்டங்களையும் பொது மக்களுக்கு கொண்டு சேர்த்திட புதிய பணியிடங்கள் ஏற்படுத் தாமலும், தேவையான நிதி அளிக்காமலும், கால அவகாசம் வழங்காமலும் அரசு செயல்படுவதால் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்றி வருகிறோம்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்துக்கு 5 முகாம்கள் நடத்துவதை 2 ஆக குறைக்க வேண் டும். மேலும், இத்திட்டப் பணி களை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு வழங்கி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். என அவர் தெரிவித்தார்.