Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இரு மாதங்களில் 5 மாணவிகள் தற்கொலை; நீட் ரத்து திட்டம்தான் என்ன? – அரசுக்கு அன்புமணி கேள்வி
    மாநிலம்

    இரு மாதங்களில் 5 மாணவிகள் தற்கொலை; நீட் ரத்து திட்டம்தான் என்ன? – அரசுக்கு அன்புமணி கேள்வி

    adminBy adminMay 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இரு மாதங்களில் 5 மாணவிகள் தற்கொலை; நீட் ரத்து திட்டம்தான் என்ன? – அரசுக்கு அன்புமணி கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்; இரு மாதங்களில் 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை.

    கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் மாணவி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் மாணவி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி மாணவி, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் மாணவி, இன்று மேல்மருவத்தூர் மாணவி என இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

    நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதை தெரிந்துகொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

    மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு தீர்வு தற்கொலை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

    June 30, 2025
    மாநிலம்

    தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

    June 30, 2025
    மாநிலம்

    திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

    June 30, 2025
    மாநிலம்

    அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

    June 30, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி

    June 30, 2025
    மாநிலம்

    விழுப்புரம் திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: கழுகு அல்லது மலை? நீங்கள் முதலில் பார்ப்பது கவர்ந்திழுக்கும் அல்லது கடின உழைப்பாளி என்றால் முதலில் வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இந்திய அணிக்கு ஃபீல்டிங் சரியில்லாதது பெரிய பிரச்சினை அல்ல’ – புதிர் போடும் கிரெக் சாப்பல்
    • தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!
    • எங்கள் எழுதப்படாத சியோல் முடிவு விளக்கியது: மி ரே மற்றும் மி ஜி அவர்களின் புதிய பயணங்களை எவ்வாறு தொடங்கினார்கள் – மற்றும் சீசன் 2 இருக்குமா?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.