மேஷம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
ரிஷபம்: மன இறுக்கம் நீங்கும். முகப் பொலிவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.
கடகம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
சிம்மம்: திட்டமிட்டபடி வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
கன்னி: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.
துலாம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார்.
விருச்சிகம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
தனுசு: மனைவிவழியில் விட்டுக் கொடுத்து போகவும். திட்டமிட்ட பணியை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் வெற்றி பெற பெரிய அளவில் போராட வேண்டும்.
மகரம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பூர்வீக சொத்தை விற்பீர். வியாபாரத்தில் பெரிய மனிதர், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.
மீனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த தொகை தானாக வந்து சேரும். உத்தியோகம் சிறக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |