Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’ – கச்சைகட்டும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர்!
    மாநிலம்

    ‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’ – கச்சைகட்டும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர்!

    adminBy adminMay 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’ – கச்சைகட்டும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னாலும் சொன்னார் எல்லாக் கட்சிகளும் இப்போது இதை முக்கிய அஜென்டாவாக வைக்கத் தொடங்கிவிட்டன.

    ​தி​முக கூட்​ட​ணிக்​குள் சலசலப்பை உண்​டாக்க வேண்​டும் அங்​கிருக்​கும் கட்​சிகளுக்​கும் சபலத்தை உண்​டாக்க வேண்​டும் என்​ப​தற்​காகவே கட்​சி​யின் முதல் மாநாட்​டிலேயே போகிற போக்​கில் ‘அதி​காரத்​தில் பங்​கு’ என்று கொளுத்​திப் போட்​டார் விஜய். அது இப்​போது நன்​றாகவே பற்றி எரிய ஆரம்​பித்​திருக்​கிறது.

    “2026-ல் தமி​ழ​கத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்சி அமை​யும்” என அமித் ஷா வெளி​யிட்ட அறி​விப்​பானது அதி​முக – பாஜக கூட்​ட​ணிக்​குள் ஆளுக்​கொரு வித​மாக புரிந்து கொள்​ளப்​பட்​டுள்​ளது. இருந்​தா​லும் இதை இப்​போது சர்ச்​சை​யாக்க வேண்​டாம் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு பார்த்​துக் கொள்​ளலாம் என இரண்டு கட்​சிகளுமே அர்த்​தத்​துடன் அடக்கி வாசிக்​கின்​றன.

    இந்த நிலை​யில், காங்​கிரஸ் கட்​சிக்​கும் அமைச்​ச​ராகும் ஆசை அடிமன​தில் இருக்​கிறது. ஆனால், திமுக என்ன நினைக்​குமோ என்ற அச்​சத்​தில் அதன் தலை​வர்​கள் அதை வெளிப்​படை​யாகச் சொல்​லத் தயங்​கு​கி​றார்​கள். ஆனால், நிர்​வாகி​கள் விடு​வ​தாக இல்​லை. ஏப்​ரல் 14-ம் தேதி செல்​வப்​பெருந்​தகை​யின் பிறந்த நாளுக்​காக கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் ஷெரிப், ‘ஆட்​சி​யில் பங்கு அதி​காரத்​தி​லும் பங்கு – 2026-ன் துணை முதல்​வரே’ என போஸ்​டர் அடித்து புரட்சி செய்​திருந்​தார். இதைப் பார்த்​து​விட்​டுப் பதறிப்​போன செல்​வப்​பெருந்​தகை ஷெரிப்​புக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி இருக்​கி​றார்.

    இதைத் தொடர்ந்து சென்​னை​யில் நடை​பெற்ற காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் கூட்​டத்​தில் இந்த விவ​காரம் சர்ச்​சை​யாகி இருக்​கிறது. கட்​சி​யினர் தவறு செய்​தால் நடவடிக்கை எடுக்க வேண்​டிய இடத்​தில் இருக்​கும் காங்​கிரஸ் ஒழுங்கு நடவடிக்​கைக் குழு தலை​வர் கே.ஆர்​.​ரா​ம​சாமியே, “அப்​படி போஸ்​டர் அடித்​த​தில் என்ன தவறு இருக்​கிறது?” என்று கேட்​டிருக்​கி​றார்.

    இது குறித்து கே.ஆர்​.​ரா​ம​சாமி​யிடம் பேசினோம். “நாங்​கள் திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கி​றோம். கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் அவர்​கள் விருப்​பத்​தைச் சொல்​கி​றோம். எங்​களுக்​கும் ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என தெரி​விப்​ப​தில் தவறில்​லை. இதில் நாங்​கள் பின் வாங்​க​வில்​லை. காங்​கிரஸ் மாநில தலை​வரை, துணை முதல்​வர் என ஷெரிப் வெளிப்​படுத்​தி​யது அவரது விருப்​பம். இதற்கு நோட்​டீஸ் அனுப்​பத் தேவை​யில்லை என்​பது எனது கருத்​து. அதனால், நோட்​டீஸ் அனுப்​பியதை நாங்​கள் ஏற்​றுக் கொள்​ள​வில்​லை.

    கட்​சி​யினரின் ஆர்​வத்தை இப்​படி ஆரம்​பத்​திலேயே கிள்ளி எறிந்​தால் கட்​சியை வளர்த்​தெடுக்க முடி​யாது. தொண்​டர்​களும் சோர்ந்து விடு​வார்​கள். ஆட்​சி​யில் பங்கு கேட்க காங்​கிரஸ் கட்​சிக்​கும் உரிமை இருப்​பது நியா​யம்​தானே?

    ராம​நாத​புரம் உள்​ளிட்ட பல மாவட்​டங்​களில் மாவட்​டத் தலை​வர்​களை நியமிக்​காமல் இருப்​பது வருத்​த​மாகத் தான் உள்​ளது. மீண்​டும் நான் தேர்​தலில் நிற்க வேண்​டும் என்று சொன்​னால் கட்​சி​யில் எனக்கு சீட் கொடுத்​து​விடு​வார்​கள். ஆனால், நான் கட்​சியை வளர்க்க வேண்​டும் என நினைக்​கிறேன். அதற்​காகத் தொடர்ந்து பணி​யாற்​றிக் கொண்​டிருக்​கிறேன்” என்​று சொன்னார் அவர்.

    ஒரு​வேளை, மறு​படி​யும் தேர்​தலில் போட்​டி​யிடும் திட்​டத்​தில் இருந்​தீருப்​பீர்​கள் என்​றால் ‘ஆட்​சி​யில் பங்​கு’ என்று கேட்​ப​தில் இருக்​கும் ஆபத்து உங்​களை​யும் மிரட்டி இருக்​குமோ என்​னவோ!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து விசிக தான் வலுவான கட்சி!” – திருமாவளவன்

    June 30, 2025
    மாநிலம்

    காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

    June 30, 2025
    மாநிலம்

    ராமதாஸ் மீது திடீர் பாசமா? – அன்புமணிக்கு திருமாவளவன் விளக்கம்

    June 30, 2025
    மாநிலம்

    புதுச்சேரி: பாஜக முக்கிய நிர்வாகிகள் பயணித்த விமானம் ரத்து!

    June 30, 2025
    மாநிலம்

    “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல” – உதயநிதி விவரிப்பு 

    June 30, 2025
    மாநிலம்

    இடம் தயார், பணமும் தயார்… தீயணைப்பு நிலையம் கட்டுவது எப்போது? – செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?
    • “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து விசிக தான் வலுவான கட்சி!” – திருமாவளவன்
    • ‘கேப்டன் கூல்’ – டிரேட்மார்க் பதிவு செய்த தோனி!
    • ஸ்டாண்ட்போர்டை தளமாகக் கொண்ட நரம்பியல் விஞ்ஞானி 3 நாட்களுக்குள் காலை நபராக மாற 3 சிறந்த படிகளை அறிவுறுத்துகிறார்
    • காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.