Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு: அரசுக்கு கமல்ஹாசன் எம்.பி யோசனை
    மாநிலம்

    அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு: அரசுக்கு கமல்ஹாசன் எம்.பி யோசனை

    adminBy adminAugust 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு: அரசுக்கு கமல்ஹாசன் எம்.பி யோசனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மேற்கத்திய அதிகார அரசியலில் கொள்கை எனும் முகமூடியால் தண்டனை எனும் நாடகம் அடங்கேற்றப்படும் என்பதை அமெரிக்கா மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகளாக, காலனி ஆதிக்கத்தால் இந்தியா சூறையாடப்பட்டிருந்தாலும், நாம் ஒருபோதும் உடைந்துவிடவில்லை.

    இப்போது, கடும் வரிகள்தான் ஏகாதிபத்தியத்தின் புதிய கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய – மைய உலக விதிகளுக்கு மண்டியிடாமல் நமது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பாதுகாக்க நாம் துணிந்தோம் என்ற ஒரே காரணத்துக்காக, வேடமணிந்த இந்த மறைமுகமான தண்டனைகள் நம் மீது சுமத்தப்பட்டுள்ளன.

    நமது ஏற்றுமதியாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரி உண்மையில் வர்த்தகத்துக்கோ, உக்ரைன் தொடர்பாகவோ அல்ல. அது நமது உறுதியைக் குலைக்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்பட்ட ஓர் அரசியல் தடியடி. சீனாவை நெருக்குவதற்கு அமெரிக்கா துணிவதில்லை. ஏனென்றால் சீனா முக்கியமான விநியோகச் சங்கிலிகளில் தற்போது தன்னிறைவு பெற்றுள்ளது.

    21-ஆம் நூற்றாண்டின் முக்கிய ஆதாரங்களான அபூர்வ கனிமங்கள், காந்தங்கள், சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பேனல்கள், லித்தியம் பேட்டரிகள் போன்றவற்றை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்கா அவற்றைச் சார்ந்திருக்கிறது. மகாத்மா காந்தி நமக்கு நினைவூட்டிய பாடம் இதுதான்: தற்சார்பு என்பது ஒரு முழக்கம் அல்ல; அது நமது எதிர்காலத்துக்கான ஒரு பாதுகாப்புக் கேடயம்.

    நமது ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் இதயத் துடிப்பான திருப்பூர், சூரத் மற்றும் நொய்டாவில் உள்ள என் சகோதரர்களுடன், இந்தியாவை உலகின் முன்னணி இறால் ஏற்றுமதியாளராக மாற்றிய ஆந்திரப் பிரதேச இறால் விவசாயிகளுடன், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் தொழிலில் உள்ள நம் சகோதரர்களுடன் நான் துணை நிற்கிறேன்.

    இது நாம் அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய தருணம். இந்தியர்களின் வாழ்வாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, முழு தேசமும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். பின்வரும் நடவடிக்கைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    அவசர கால உதவி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் தவணைகளைச் செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும். மேலும், ஒரு சிறப்பு அவசர கால கடன் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

    குறைந்த வட்டியில் மூலதனம்: ஏற்றுமதியாளர்கள் எளிதாகவும் குறைந்த செலவிலும் கடன் பெறுவதற்கு கடன் உத்தரவாதத்தை விரிவுபடுத்தி, குறைந்த வட்டியில் ஏற்றுமதிக் கடன்களை மீண்டும் வழங்க வேண்டும்.

    செலவினங்களில் நிவாரணம்: ஏற்றுமதியாளர்களுக்கான தற்காலிக மின் கட்டணச் சலுகைகள், புதிய சந்தைகளுக்குச் செல்ல சரக்குக் கட்டணத்தில் ஆதரவு, மற்றும் செயற்கை நூல்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    August 29, 2025
    மாநிலம்

    ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை, ரூ.24 லட்சம் அபராதம்!

    August 28, 2025
    மாநிலம்

    இலங்கை துறைமுகத்தில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலமிட நடவடிக்கை

    August 28, 2025
    மாநிலம்

    “விஜய் மீதான புகாரை வாபஸ் பெற அழுத்தம்…” – தவெக தொண்டர் சரத்குமார் குற்றச்சாட்டு

    August 28, 2025
    மாநிலம்

    முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியை தகுதியற்ற நடுவர்கள் நடத்துவதாக மதுரையில் தர்ணா!

    August 28, 2025
    மாநிலம்

    “2006 தேர்தலில் விஜயகாந்த் போல 2026-ல் விஜய் தாக்கம் ஏற்படுத்துவார்” – தினகரன் கணிப்பு

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செப்.10 முதல் காலாண்டுத் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை அட்டவணை வெளியீடு
    • ‘அங்கிள்’ என்று விஜய் சொன்னது தப்பான வார்த்தை அல்ல – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
    • குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
    • கிறிஸ்டியானோ ரொனால்டோ நீண்ட ஆயுள் மற்றும் உச்ச செயல்திறனுக்கான தனது வென்ற சூத்திரத்தை வெளிப்படுத்துகிறார்: “வெற்றிக்கு மிக முக்கியமான விஷயம் …..” | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு – ரசிகர்கள் ஏமாற்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.