மதுரை: “தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் தலைமை” என பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுதாகர் ரெட்டி இன்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து அதிகளவில் உள்ளது. 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று சட்டம் – ஒழுங்கை சரி செய்யும்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியின் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி தான். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் 2026 தேர்தலை அதிமுக – பாஜக கூட்டணி சந்திக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்துக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். பழனிச்சாமியின் எழுச்சி பயணத்துக்கு பிரதமர் மோடியின் ஆசியும், வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஓ.பன்னீர் செல்வத்துக்கு முக்கிய த்துவம் கொடுப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.