வின் பாஸ்ட் இந்தியா நிறுவனம், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 மின்சார எஸ் யுவி கார்களை அறிமுகப்படுத்தியது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின் பாஸ்ட் நிறுவனம் அங்கு மின்சார வாகனங்கள் உற்பத்தி யில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது. இது மின் சார கார்கள், ஸ்கூட்டர்கள், பஸ் களை அங்கு உற்பத்தி செய்து வருகிறது. பின்னர் தனது வணி கத்தை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, பிலிப்பைன்ஸ், மத் திய கிழக்கு நாடுகளுக்கும் விரிவுபடுத்தியது.
தற்போது தமிழகத்தின் தூத் துக்குடியில் ஓர் ஆலையை தொடங்கி கார்களை உற்பத்தி செய்து வருகிறது. முதல்கட்ட மாக விஎப், விஎப்7 (VF6, VF7) ஆகிய மின்சார எஸ்யுவி கார் களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிமுக விழா டெல் லியில் நேற்று நடைபெற்றது.
வின் பாஸ்ட் ஆசியா நிறு’ வனத்தின் தலைமை செயல் அதி காரி பாம் சான் சாவ் இந்த கார் களை அறிமுகப்படுத்தி பேசுகை யில், “எங்கள் நிறுவனம் அதன்வர லாற்றில் முக்கியமான நிலையை எட்டியுள்ளது. தற்போது அறி முகப்படுத்தப்பட்டுள்ள கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட் டவை. அதுமட்டுமல்ல. இந்தியர் களால் இந்தியர்களுக்காக உரு வாக்கப்பட்டது. இந்திய குடும் பங்களுக்கு ஏற்ப இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அன் றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகை யிலான டிசைன், உயர்ந்த தரம், நவீன தொழில்நுட்பம் ஆகிய வற்றின் கலவையாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன. தூத்துக் குடி ஆலையில் இவை தயாரிக் கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற் றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள் ளது” என்றார்.
வின் பாஸ்ட் விளப் 6: வின்பாஸ்ட் விஎப் 5 காரில் பொதுவான அம்சங்களாக 59.6 கி. வாட் பேட்டரி, 25 நிமிடங்களில் 10 முதல் 70% சதவீதம் பாஸ்ட் சார்ஜ் திறன், ஒரு சார்ஜில் 468 கி.மீ. ஓடும் திறன் (ARAI), 2730 மிமி வீல் பேஸ், 190 மிமி கிரவுண்ட் கிளிய ரன்ஸ், 18அங்குல அலாய்வில், 129 அங்குல இன்போடெய்ன்மென்ட் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த கார்கள் எர்த், விண்ட், விண்ட் இன்பினிட்டி ஆகிய 3 வகைகளில் கிடைக்கின்றன. வின்பாஸ்ட் விஎப்6 மாடல் கார் ரூ.16,49,000 என்ற ஆரம்ப விலை யில் கிடைக்கும். வின் பாஸ்ட் விஎப் 7 காரில் 19 அங்குல அலாய் வீல், 7 காற்றுப் பைகள், 12.9 அங் குல இன்ஃபோடெயின் மென்ட், கீலெஸ் என்ட்ரி போன்ற அம் சங்கள் உள்ளன. ஒரு சார்ஜில் அதிகபட்சமாக 532 கி.மீ (ARAI) தூரம் ஓடும் திறன் கொண்டவை. இந்த காரில் எர்த் (59.6 கி.வாட் பேட்டரி), வின்ட் (70.8 கி.வாட் பேட்டரி), ஸ்கை, வின்ட் இன் பினிட்டி, ஸ்கை இன்பினிட்டி என 5 மாடல்கள் உள்ளன. வின்பாஸ்ட் விஎப் 7 கார் ரூ.20,89,000 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். நடப்பு ஆண்டுக்குள் 27 நகரங் களில் இந்நிறுவனம் 35 டீலர்கள், 26 சர்வீஸ் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. சென்னை மட்டு மின்றி டெல்லி, மும்பை, பெங் களூரு, புனே, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ ஆகிய நகரங்களில் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
– புதுடெல்லியில் இருந்து க.கலைமணி